BOI வங்கி வேலை வாய்ப்பு! 400 காலிப் பணியிடங்கள்! 

பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 400 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அப்ரண்டீஸ் பிரிவில், மத்திய பிரதேசத்தில் 65 காலி பணியிடங்களும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 60 காலி பணியிடங்களும், குஜராத் மாநிலத்தில் 50 காலி பணியிடங்கள் , ஜார்க்கண்டில் 46 காலி பணியிடங்கள், மேற்கு வங்கத்தில் 40 காலி பணியிடங்கள், கர்நாடகாவில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 25 காலி பணியிடங்கள், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தலா ஐந்து காலி பணியிடங்கள், உட்பட மொத்தம் 400 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியில் சேர்வதற்கான கல்வி தகுதி, ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும், இந்த பணிக்கான தேர்ச்சி முறை என்பது ஆன்லைன் மூலமாக நடைபெறும்.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணமாக 800 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு தலா 600 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதிக்குள் இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய http://www.bankofindia.bank.in என்ற இணைய முகவரியில் சென்று தெரிந்து கொள்ளவும்.