குப்பை தொட்டியில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை சடலம் மீட்பு..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அப்பார்ட்மெண்ட் முன் உள்ள குப்பை தொட்டி அருகே பிறந்து 3 நாட்களான பெண் குழந்தை பிணமாக கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சிக்கதாசம் பாளையம் கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தை பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த குழந்தை கள்ளக்காதலில் பிறந்த குழந்தையா ?அல்லது யாராவது கொலை செய்து வீசி விட்டுச் சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.