கோவை மாவட்ட கணிம வளபிரிவு சிறப்பு துணை தாசில்தார் கணேசன் நேற்று கவுண்டம்பாளையம் – இடையர்பாளையம் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை எடுத்து தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 4 யூனிட் ” புளூ மெட்டல் “இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அனுமதி இல்லாமல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனால் லாரியும், புளு மெட்டலும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி, லாரி உரிமையாளர் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.
லாரியில் கடத்திய புளூ மெட்டல் பறிமுதல் – டிரைவர், உரிமையாளர் மீது வழக்குபதிவு..!
