உலக நாடுகளுக்கு வரிவிதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்தியா மீதான வரி விரைவில் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் உலக நாடுகள் மீது பரஸ்பர வரியை விதித்துள்ளார். அவ்வாறாக இந்தியா மீது ரஷ்யாவுடனான எண்ணெய் வணிகம் போன்றவற்றை காரணம் ...
வெளிநாட்டு தொழில் முதலீடுகளை திரட்டுவதற்காக இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலீடுகளை ஈர்க்க இதுவரை 4 வெளிநாட்டு பயணங்களை முதல்-அமைச்சர் மேற்கொண்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம், துபாய், ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றபோது ரூ.6,100 கோடி தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அதே ஆண்டில் ...
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் அலுவலக இட வசதி வழங்குநர்களில் ஒன்றான WorkEZ (Work Easy Space Solutions), கோயம்புத்தூரில் 1,00,000 சதுர அடி பரப்பளவில் புதிய அலுவலக இடத்தை அமைப்பதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வசதி, கோயம்புத்தூரின் தகவல் தொழில்நுட்ப துறையின் மையமாக திகழும் சரவணம்பட்டிக்கு அருகில் அமைந்துள்ளது. இது, தகவல் தொழில்நுட்பம், உலகளாவிய ...
கோவை அருகே உள்ள சூலூர் ,கலங்கல்ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஜெயா ( வயது 50)குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தஇவரது உறவினர்கள் தாமரைக்கண்ணன், அப்பாவு ,,சுரேஷ், அமுலு, வேல்முருகன் சரோஜா.இவர்களுக்கிடையே நகை -பணம் பரிமாற்றம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஜெயா வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றிருந்தார் .அப்போது அங்கு ...
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் தன்ராஜ் பஸ்வான் ( வயது 18) இவர் துடியலூர் விஸ்வநாதபுரம், , கலிங்க நகர் பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார் .இவர் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். நேற்று காதலியுடன் செல்போனில் நீண்ட நேரம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாராம். பிறகு விஸ்வநாதபுரம் கலிங்க ...
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை காவல் நிலைய பகுதியை சேர்ந்தவர் முனியசாமி.இவரது மகன் தர்மராஜ் (45) இவர் கடந்த 2024- ம் ஆண்டு தன்னுடைய மனைவி உமா (39) என்பவரை குடிபோதையில் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக தர்மராஜ் மீது சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ...
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று மலுமிச்சம்பட்டி பிரிவு அருகே திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சாரதி பெஹ்ரா மகன் சந்திப் குமார் பெஹ்ரா(வயது22) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 கிலோ 300 கிராம் ...
கோவை அருகே உள்ள சூலூர், சுகந்தி நகரில் வசிப்பவர் மேரி ஜூலியா ( வயது 57) மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று கடையில் இருந்த போது 2 வாலிபர்கள் சிகரெட் வாங்குவது போல கடைக்கு வந்தனர் .திடீரென அவர்கள் மேரி ஜூலியாவின் தலையில் சுத்தியலால் அடித்து தாக்கிவிட்டு அவர் கழுத்தில் அடைந்திருந்த 4 ...
கோவை : விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாநகர பகுதியில் 722 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது .இதில் கடந்த 27ஆம் தேதி 20 சிலைகளும் நேற்று 418 சிலைகளும் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.இ தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மீதமுள்ள 284 சிலைகளும் கரைக்கப்படுகிறது.இதை ஒட்டி நாளை மாநகர் பகுதியில் போக்குவரத்து ...
நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.65 ஆகவும், பவுனுக்கு ரூ.680 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. இது ஒரு புதிய உச்சம் ஆகும். நேற்று மதியம் தங்கம் விலை மீண்டும் ஏறியது. அப்போது தங்கம் விலை கிராமுக்கு ரூ.9,535 ஆகவும், பவுனுக்கு ரூ.76,280 ஆகவும் விற்பனை ஆனது. நேற்று ஒரு கிராம் ...













