பெங்களூரு: மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. பார்வதியின் கோரிக்கைப்படி மைசூருவில் ...
இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 13 பேர் இன்று சொந்த ஊர் வந்து சேர்ந்தனர்.கடந்த ஜுன் 30 ஆம் தேதி பாம்பனிலிருந்து ஜார்ஜ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் 7 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகச் சொல்லி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ...
வாஷிங்டன்: மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட தவாஹிர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2008ல், நவ.26ம் தேதி இரவு மும்பையில் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களைக் குறிவைத்துத் தாக்குதலை நடத்தினர். பல இடங்களில் நான்கு நாட்கள் வரை நீடித்த இந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள் 166 ...
திருச்சிராப்பள்ளி தெப்பக்குளம் அருகில் உள்ள பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (17.08.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற சிறார் இதழ்களில் பங்களித்த மாணவ படைப்பாளிகளை பாராட்டும் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிறார் படைப்பாளிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், இணை இயக்குநர் அமுதவல்லி , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ...
கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை அவிநாசி ரோடு, ஹோப் கல்லூரி பகுதியில் ரயில்வே மேம்பாலம் அருகே நாளை ( ஞாயிற்றுக்கிழமை) முதல் உயர்மட்ட மேம்பால தூண் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அங்கு நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காந்திபுரத்தில் இருந்து லட்சுமி மில் சந்திப்பு ,எஸ். என் ...
கோவை அருகே உள்ள வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ( வயது 52) இவர் ராம் நகரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். கோவை ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை ...
கோவை ஆகஸ்ட் 17 போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர்,பெலிக்ஸ் ஆகியோரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .இந்த நிலையில் சவுக்கு சங்கர்,பெலிக்ஸ் ஆகியோர் சுதந்திரப் போராட்ட வீரரான பசும்பொன் ...
கோவை அரசுமருத்துவமனையில் உரிய பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல், நாளை காலை 6 ...
கோவை காந்திபுரம் பகுதியில் வசிப்பவர் சிந்து. இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சிந்து காந்திபுரம் 100 அடி சாலை 9வது வீதி, ராஜேந்திர பிரசாத் சாலையில் இவர் வீட்டில் வீடு வாசல் கூட்டிக்கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் ஐசக் பாபு என்பவர் தன்னுடைய வளர்ப்பு நாயை பிடித்து வந்து கொண்டிருந்தார். அப்போது ...
கோவை மாவட்டம் காரமடை -கரியாம்பாளையம் ரோட்டில் உள்ள சென்னி வீரம்பாளையம் பகுதியில் வேகமாகச் சென்ற கார் திடீரென்று நிலை தடுமாறி மரத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த பிரஸ் காலனி வள்ளலார் நகரை சேர்ந்த செல்வபாய் ( வயது 72) ஜெய் ஸ்ரீ நகர் சுகந்திகா ( வயது 24) மனோன்மணி ( வயது ...













