கோவை அருகே உள்ள இருகூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 41) வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கோவை ரயில் நிலையம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு தனது மனைவி, மகளுடன் சாப்பிட சென்றார். சாப்பிட்டு விட்டு ஓட்டலுக்கு வெளியே பிரவீன் குமார் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ...
கோவை சூலூர்அருகே உள்ள ரங்கநாதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான கார் ஷோரூம் மற்றும் பழைய கார்கள் பழுதுபார்க்கும் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 15 கார்கள் எறிந்து நாசமானது. சேத மதிப்பு ரூ 1 கோடியே 50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். ...
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் பத்திரப்பதிவு துறையின் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது . இங்கு பணியில் உள்ள சார்பதிவாளர் செல்வ பாலமுருகன், இவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை, பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் கூறி வருவதாகவும், அதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு, வீண் பிரச்சனைகள் ஏற்படுவதாக அன்னூர் பகுதி வியாபாரிகள், விவசாயிகள் சம்மந்தப்பட்ட பத்திர ...
திருச்சி மேலப்புதூர் பகுதியில், டிஇஎல்சி நிர்வாகத்துக்குட்பட்ட பிஷப் ஹைமன் நினைவு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இது அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியாகும். இங்கு கிட்டத்தட்ட 50 மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் இணைந்து மாணவ மாணவிகளுக்கு விடுதி உள்ளது. வெளியூரை சேர்ந்த 40 மாணவ மாணவிகள் ஹாஸ்டலிலேயே தங்கியிருந்து படித்து வருகிறார்கள். ...
கிருஷ்ணகிரி : பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். இந்த புகாரில் முக்கிய குற்றவாளியாக போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் உட்பட பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர், பயிற்சியாளர் உட்பட 11 பேர் ...
லண்டனில் இருந்து அதிகாலை 3.30க்கு சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், அதிகாலை 5.35 மணிக்கு மிண்டும் லண்டன் புறப்பட்டுச் செல்லும். அந்த விமானத்தில் செல்வதற்காக 284 பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் லண்டனில் இருந்து தற்போது வரை புறப்படவில்லை. இதனால் இன்று அதிகாலை ...
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதேபோல், ஆறு மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சேலம்: சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் 528 லிட்டர் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் 2,962 பச்சிளங் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ...
விக்கிரவாண்டி : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி நடத்த அனுமதிக்கோரி கட்சியின், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகஸ்ட் 28-ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார். இதனையடுத்து, காவல்துறை சார்பில் இருந்து 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸ் ஒன்று த.வெ.கட்சிக்கு அனுப்பப்பட்டிருந்தது. ...
தமிழ் சினிமாவில் மட்டும் பாலியல் புகார் குறித்து அறிக்கை வெளியானால் 500 பேர் சிக்குவார்கள் என நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த நீதிபதி ஹேமா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஹேமா கமிட்டியின் ...













