கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று சூலூர் முத்து கவுண்டன் புதூர் அருகே வாகன சோதனை நடத்தினார்கள் . அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் (வயது 45 )கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் (வயது 45) ஆகியோரை கைது செய்தனர். ...
திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களின் கூட்ட நெரிசலைக் குறைக்க சென்னை – தூத்துக்குடி இடையிலான சிறப்பு ரயிலானது (06186) 8 ஆம் தேதி இயக்கப்பட்டு, மறுமாா்க்கமாக தூத்துக்குடி – சென்னை இடையிலான சிறப்பு ரயிலானது (06187) வரும் 9 ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. சென்னையிலிருந்து 21 பெட்டிகளுடன் இரவு 12.25 ...
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது – காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் புழக்கத்தில் பத்து ரூபாய் நாணயங்கள் இருந்து வருகின்றது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. ...
ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் வேல் டெக் கல்லூரி நிர்வாகத்தினர் இணைந்து நடத்திய போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆவடி காவல் ஆணையாளர் கி. சங்கர் தலைமையில் வீராபுரம் வேல் டெக் ஹைடெக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையாளர் அவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் மாணவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும் ...
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அனைத்து நிலைப் பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேசுராஜ் தலைமை தாங்கினர். இந்த ஆர்பாட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையில் ஆசிரியர் பயிற்றுநர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள், கணக்காளர்கள், பொறியாளர்கள், ...
ஜம்மு காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், உதம்பூர் மாவட்டத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையொட்டி, அந்த மாவட்டத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக எஸ்எஸ்பி அமோத் அசோக் நாக்புரே தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் ...
டெல்லி: தமிழ்நாட்டுக்கு 3 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் கடந்த சில நாட்களாக நிலை கொண்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று மிக கனமழை பெய்தது. ...
புதுடில்லி:ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் எப்.ஏ.ஓ., எனும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ‘உலக உணவு விலை குறியீடு’ கடந்த மாதம் மூன்று சதவீதம் உயர்ந்து, 124.40 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு, இதுவே அதிக சதவீத உயர்வாகும். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இது 120.70 புள்ளிகளாக இருந்தது. ...
சென்னை: மெரினா விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களில், வெயில் தாங்க முடியாமல் 5 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனக்கூறியுள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேற்று சென்னையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு தேவையான ஒத்துழைப்பையும், வசதிகளையும் ...
மெரீனாவில் விமானப் படை சாகச நிகழ்ச்சியின்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் ...













