ஏற்கனவே ஹிண்டன்பர்க் அறிக்கையின் காரணமாக இரண்டு முறை அதானி குழும பங்குகள் சரிந்த நிலையில், ஒரே வாரத்தில் மீண்டும் உயர்ந்தது. ஆனால் தற்போது, அமெரிக்க அரசின் குற்றச்சாட்டு காரணமாக அதானி குழும பங்குகள் சுமார் 23 சதவீதம் சரிவை சந்தித்ததாகவும், இனி மீண்டும் இந்நிறுவனம் எழுந்திருக்கவே முடியாது என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பரபரப்பை ...

மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் மோதல் கடந்த சில வாரங்களில் மிக மோசமான நிலைமையை எட்டியுள்ளது. குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா தனது அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் பிரிட்டன் மீதும் கூட தாக்குதல் நடத்தப் போவதாக ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ...

ஆயக்குடி:”எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு”என, திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆயக்குடியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவன் பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பழநியாண்டவரை தரிசிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்பதால் அதை பார்க்க வந்தேன். நேர்த்திக் கடன் செலுத்த வந்ததாக செய்திகளைக் கிளப்பி விடுவர். உண்மையில் அதற்காக வரவில்லை.காலம் காலமாக ...

புதுடெல்லி: இந்தியா உலகின் ஆன்மிகத் தலைநகரம் என்றும், மேன்மை மற்றும் தெய்வீகத்தின் தொட்டில் என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லியில் உள்ள தேசியப் பாதுகாப்புக் கல்லூரியில் இன்று (நவ.21) நடைபெற்ற ‘இந்தியாவின் முக்கிய மதிப்புகள், ஆர்வங்கள் மற்றும் நோக்கங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய ஜக்தீப் தன்கர், “உலக அமைதி குலைந்து, போர்கள் தீவிரமடைந்து, ...

சேலம்: இந்து சமய அறநிலையத் துறை கோயில் பணத்தை சூறை​யாடி வருகிறது. எனவே, அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்​டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்​னாள் ஐ.ஜி. பொன் மாணிக்க​வேல் கூறினார். சேலம் சுகவனேஸ்​வரர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்த பொன்​.​மாணிக்க​வேல், பின்னர் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அறநிலையத் துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை, மக்கள் ...

ஹேக், போர்க்குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் ராணுவ அமைச்சருக்கு எதிராக, சர்வதேச நீதிமன்றம் பிடி வாரன்ட் பிறப்பித்துள்ளது. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் ஹேக் நகரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளது. இதில், 124 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகள் இறையாண்மை மற்றும் தேச நலன் கருதி இந்த ...

கோவையில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் ஸ்டாலின், சரவணகுமார் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .இது தொடர்பாக அடிக்கடி வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது ..இந்த நிலையில் துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில், குனியமுத்தூர் உதவி கமிஷனர் அஜய், கரும்புக்கடை இன்ஸ்பெக்டர் ...

கோவை துடியலூர் ஜி.என்.மில் பகுதியில் உள்ள எஸ். எம். ஆர். லே அவுட்டைசேர்ந்தவர் டேனியல். இவரது மகள் பியோனா (வயது 10) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் அவரது வீட்டில் விட்டத்தில் சேலையைக் கட்டி விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். நேற்று விளையாடும் போது எதிர்பாராத விதமாக சேலை கழுத்தில் இறுக்கி மயங்கி ...

கேரள மாநிலம் எர்ணாகுளம் ,புதுவஞ்சேரியை சேர்ந்தவர் பிஜி குமார். இவரது மகன் மிதுன்ஜித் (வயது 20) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் தனது நண்பர் அபிஜய்யுடன் உக்கடம் லாரி ஒனர்ஸ் அசோசியேஷன் பெட்ரோல் பங்க் அருகே நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த ...

கோவை ராமநாதபுரம், மருதூர், நஞ்சப்பன் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 59) ஆர் .எஸ் . புரம் சடையப்பத் தேவர் வீதியைச் சேர்ந்தவர் விக்டர் ( வயது 60) இவர்கள் இருவரும் பெயிண்டிங் தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் 2 பேரும் நேற்று மதியம் 11:30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் நஞ்சுண்டாபுரத்தில் இருந்து ...