முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில் 26 வயது கொண்ட தெய்வானை என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த யானை தங்குவதற்காக கோவிலின் பின்புறம் குடில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த யானை குளிப்பாட்டுவதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுமார் 30 லட்சம் மதிப்பில் குளியல் ...

சென்னை: திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசே அகற்றி, அது தொடர்பான அறிக்கையை அமர்வில் டிச.23-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உற்பத்தியாகும் மருத்துவக் கழிவுகள், அம்மாநில எல்லையை ஒட்டி திருநெல்வேலி பகுதியில் சில தினங்களுக்கு முன்பு கொட்டப்பட்டது. இது தொடர்பாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் ...

வால்பாறை அருகே காடம்பாறை நீர்மின் சக்தி உற்பத்தி மையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இதில் 28 தொழிலாளர்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வேலையில் இருந்து நீக்கியது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சார்பில் கோவை தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கீழ் கோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து ...

கோவை வெரைஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை நேற்று அங்குள்ள சிஎம்சி காலணி, விளையாட்டு மைதானம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் கஞ்சா இருந்தது கடைபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் செல்வபுரம் தில்லை நகரை ...

கோவை மாவட்டம், பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்களிடம் தங்க சங்கலி பறிப்பு வழக்கில் ஈடுபட்ட நாகராஜன் மகன் விஷ்ணு (வயது 29) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இவர் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு வந்ததால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாவட்டக் ...

கோவை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் இன்று மதியம் 11 மணி அளவில் 3 பெண்கள் நடுரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து சென்று அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.ஆனால் அவர்கள் பெண் போலீசாரின் பிடியிலிருந்து திமிரி ரோட்டில் ...

கோவை, கவுண்டம்பாளையம், கந்தகோனார் நகரை சேர்ந்தவர் ராஜன், ( வயது 45. ) தொழில் செய்து வருகிறார். கடந்த, 2023ம் ஆண்டு அக்டோபர்மாதம் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பிஜாய், (வயது46) மற்றும் அவரின் மனைவி ரெகனா ஆகியோர் இவருக்கு அறிமுகமானர்கள் . பிஜாய் இந்தியன் ரயில்வேயில் அதிகாரியாக உள்ளதாக ராஜனிடம் தெரிவித்தார். தனக்கு சொந்தமாக ...

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.999/- விலையில் 20 மளிகைப் பொருட்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனைத் திட்டத்தினை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உழவர் பெருமக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் 1972-ல் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு ...

கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் கண்ணம்மா(வயது 75) இவர் கடந்த 7-ந் தேதி தனது மகன் வீட்டின் முன்பு இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் கண்ணம்மாவின் கழுத்திலிருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். ...

மதுரையைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 33 ) பெயிண்டர் . இவரது மனைவி சரண்யா (வயது 31) கார்த்திக் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் சூலூரில் வசித்து வந்தார் .அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் கார்த்திக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் கார்த்திக் தனது மனைவி ...