கோவை மின் பகிர்மான வட்டம் ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணி மற்றும் விரிவாக்க பணி நடைபெறுகிறது. இதையொட்டி நாளை ( சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, ரேஸ்கோர்ஸ், அவிநாசி ரோடு அண்ணா சிலை முதல் கலெக்டர் அலுவலகம் வரை, திருச்சி ...

கோவை மத்திய சிறையில் ஏராளமான கைதிகள் உள்ளனர். அவர்களில் சிலர் கஞ்சா பயன்படுத்துவதாக சிறை துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் கைதிகளின் அறையில் சோதனை செய்தனர் .அதில் ராஜன் என்ற கைதியிடமிருந்து 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. உடனே அதிகாரிகள் ராஜனிடம் விசாரணை நடத்தினர் .அதில் அவர் ஆயுள் தண்டனை ...

வேலூர் மாவட்டம், தொரப்பாடியை சேர்ந்தவர் வெற்றிவேல் ( வயது 33) கட்டிடமேஸ்திரி. இவர் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணின் 13 வயது மகளிடம் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர் கோவை கே .ஜி . சாவடி பகுதியில் அறை எடுத்து தங்கி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் குடிபோதையில் ...

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த 66 வயது முதியவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை மத்திய புலனாய்வுத்துறை ( சிபிஐ) அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார் .பின்னர் அவர் நீங்கள் சட்டவிரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் உங்கள் வங்கி கணக்கை ஆய்வு செய்ய வேண்டும். எனவே உங்கள் வங்கி கணக்கு ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் கடை பகுதியில் பேருந்து திரும்பும் குறுகிய சாலையோரப் பகுதியில் தடுப்பு சுவர் இல்லாமல் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் திரும்புவதற்கு பெரும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையை சம்பந்தப்பட்ட நகர்மன்ற உறுப்பினர் அன்பரசனிடம் எடுத்துக்கூறி அப்பகுதியில் தடுப்புச்சுவர் கட்டித்தர பொதுமக்களும் பேருந்து உள்ளிட்ட வாகன ஓட்டுனர்களும் தொடர்ந்து கோரிக்கை ...

கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கோரி, உயா்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து ...

டெல்லி: 8ஆவது சம்பள கமிஷன் மூலம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வு தொகை 186 சதவீதம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது. 8ஆவது சம்பள கமிஷனானது 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் உயர இருக்கிறது. இந்த ...

லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் மீண்டும் பரவிவரும் காட்டூத் தீ காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியை சுற்றியுள்ள 31,000 மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீ காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 163 சதுர கிலோமீட்டர் பரப்பரளவு காடுகள் தீக்கிரையானது. ரூ.17,29.581 ...

இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் இரும்பின் தொன்மை நூல் வெளியீட்டு விழா, கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியம் அடிக்கல் நாட்டும் விழா ஆகியவை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டும் விழாவை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அதற்கு முன்னதாகவே முக்கியமான ஒரு அறிவிப்பை இன்று வெளியிடப்போவதாக ...

நீலகிரி மாவட்டம் வண்டலூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் ( வயது 52 ) பெயிண்டர் இவர் திருப்பூர் அருள்புரம் பகுதியில் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவினாசி சந்தைப்பேட்டை பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது யாரோ மர்ம ஆசாமிகள் சிலர் பாலசுப்பிரமணியத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்தகாயம் அடைந்த பாலசுப்ரமணியத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு ...