கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள பாலாஜி நகருக்குநேற்று ஒரு பெண் மயில் வந்தது. அந்த மயில் மின்சார கம்பியின் அருகே பறந்து சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் இறந்தது. இதை அறிந்த கிராம நிர்வாக அதிகாரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார் .அதன் பேரில் வனத்துறையினர் இறந்த மயிலை மீட்டு ...
கோவை, பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள கொண்டையம் பாளையம், செங்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் .இவரது மகள் சிவரஞ்சனி ( வயது 19)காளிபாளையம், செங்குட்டை பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 29) தொழிலாளி. சிவரஞ்சனியும் கதிர்வேலும் உறவினர்கள் . இவர்கள் கடந்த 20 22- ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கதிர்வேல் ...
கோவை வ. உ . சி . உயிரியல் பூங்கா 1965 ஆம் ஆண்டு 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. இங்கு சிங்கம், புலி கரடி உள்ளிட்ட விலங்குகளும் வெளிநாட்டு பறவைகள் , பாம்புகள் ,புள்ளி மான்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் இருந்தன .அப்போது சிங்கம் புலி ஆகியவற்றை ஜோடியாக பராமரிக்காமல் தனித்தனியாக கூண்டில்அடைத்தனர். எனவே ...
வாஷிங்டன்: இந்தியாவில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க வழங்கப்பட்டு வந்த 20 மில்லியன் டாலர் நிதியுதவி நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து பேசிய டிரம்ப், நிதி உதவி மூலம் இந்திய தேர்தலில் தலையிட ஜோ பைடன் நிர்வாகம் முயற்சித்து இருக்கலாம் என யூகிக்கிறேன் எனப் பேசியிருக்கிறார். டிரம்பின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ ...
சென்னை: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று ஒரு பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்துரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 19.02.2025 அன்று மாலை ...
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, சுரங்கத்துறைச் செயலாளர், மற்றும் துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் அர்ஜென்டினாவின் கட்டமர்கா மாகாண ஆளுநர் ரவுல் அலெஜான்ட்ரோ ஜலீலை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினர். சுரங்கத்துறையில், குறிப்பாக லித்தியம் துரப்பணப் பணி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது ...
ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் செயல்பட்டதாக லோக்பால் அமைப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதனை கடந்த மாதம் 27 ஆம் தேதி லோக்பால் தலைவர் நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதி மீதும், அதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட கூடுதல் நீதிபதி மீதும் வழக்கு ...
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த 10 பேரை கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் ...
திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மும்மொழி கொள்கையை எதிர்த்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பங்கேற்று ஆவேசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது எதையும் பற்றி கவலைக்கொள்ளாமல் நம்மை தூசு என்று நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும். நாம் ...
டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்நிலையில், நேற்று டெல்லி முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி வீட்டில் நடைபெற்றது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த பிரம்மாண்டமான விழா நடைபெற்றது. இதில் ...













