திருச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி மாவட்டத்தில் தனது முதல் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ள நிலையில் தொண்டர்கள் விதிகளை மீறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலைமுன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மாவட்ட வாரியாக தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி அவரது முதல் பரப்புரை திருச்சி மாவட்டம் ...
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி மரக்கடை பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் ஏர்போர்ட் வந்த அவருக்கு தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பல்வேறு நிபந்தனைகளுடன் போலீசார் விஜய்க்கு அனுமதி கொடுத்த நிலையில் தற்போது விஜய் பிரச்சார வாகனத்தில் மரக்கடை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் ...
மாஸ்கோ: உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து பேசினார். ஆனால் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. இதனிடையே ரஷ்யா, உக்ரைன் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையும் துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் 3 சுற்றுகளாக நடைபெற்றது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், உக்ரைனுடனான அமைதிப் பேச்சு நிறுத்தப்பட்டுள்ளது ...
தமிழக பாஜக மாநில தலைவராக பதவி வகித்து வந்த அண்ணாமலை அண்மையில் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் மாநில தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார். அந்த நாள் முதல் தற்போது வரை, அண்ணாமலைக்கு பாஜகவில் எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் உள்ளது. இதனிடையே, அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. ...
நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு காவல்துறையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சீமானுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-ன் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். காவல்துறையினரின் ...
எனது அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு சமுதாய நலனுக்காகவும், இயற்கை விவசாய நலனிற்காகவும், நான் செய்து வரும் பணிகள் குறித்து சிலர் வதந்தி பரப்பிவருவதாக எனது கவனத்திற்கு வந்தது. இயற்கை விவசாயத்தின் மீது நான் கொண்டுள்ள ஆர்வத்தையும், எங்கள் ‘We the Leaders’ அறக்கட்டளை, இயற்கை விவசாயம் தொடர்பாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதையும், உங்களில் பலர் ...
திருப்பூர்: திருப்பூர் அவிநாசி சாலையில் அதிமுக ஒன்றிணைய வலியுறுத்தி அதிமுக தொண்டர்கள் பதாகைகளுடன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். அதிமுக முன்னாள அமைச்சர் செங்கோட்டையன் எழுப்பிய போர்க்கொடியைத் தொடர்ந்து அதிமுக ஒன்றிணைய வேண்டும் என குரல் தமிழகமெங்கும் வலுத்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி வாகனம் முற்றுகையிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை ...
கோவை அருகே உள்ள எஸ். எஸ். குளம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கொண்டையம்பாளையம் ஊராட்சி .இங்கு அந்த பகுதியைச் சேர்ந்த விக்ரம் ராஜ் தனது மாமியார் தங்கம்மாள், தன்னுடைய மனைவி கஸ்தூரி ஆகியோருக்கு சொந்தமான அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவான 4 சென்ட் மற்றும் 2 சென்ட் நிலங்களை வரன்முறைப்படுத்த அங்குள்ள ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றார் .அங்கு இதற்கான விண்ணப்பத்தை ...
கோவை உக்கடம் ,புல்லுக்காடு பகுதயை சேர்ந்தவர் சாந்தி ( வயது 55 )ஜி. எம். நகரில் உள்ள ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் காய்கறி வாங்க கடைவீதிக்கு வந்தார். பின்னர் அவர் காய்கறி வாங்கிவிட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்றார் .உக்கடம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ...
கோவை,வடவள்ளி,மருதமலை மெயின் ரோட்டில் நேற்று இரவு 2 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்தனர். சாலையில் அங்கும் இங்கும் ஒட்டியபடி 12 கார்களை உரசி சேதபடுத்தினர். இது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் அந்த வாலிபர்களை பிடிக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார். ...













