உதகை ஏப்ரல் 21 நீலகிரி மாவட்டம் உலிக்கல் (தேர்வுநிலை) பேரூராட்சி பகுதிகளில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி பேரூராட்சிகளின்உதவி இயக்குநர் அறிவுரையின்படி உலிக்கல் பேரூராட்சிகுக்குட்பட்ட சேலாஸ் பஜார்பகுதியில் உள்ள வணிக வளாக கடைகளில் தீவிர நெகிழி ஒழிப்பு பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்திடும்வகையில் மஞ்சப் பை மற்றும் துணிப்பைகளை உபயோகிப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ...
கோவை ஏப் 23 ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து கோவை மாநகர காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.கோவை மாநகரில் நேற்று இரவு முதல் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தலைமையில் 4 துணை ...
கோவை ஏப்23 நாட்டில் பல்வேறு நகரங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட்டை வைத்து பல இடங்களில் சூதாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் கடந்த 11-ஆம் தேதி நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 7பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.ஒன்றரை கோடி பணம் ,7 செல்போன்கள் மற்றும் ...
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை சந்து பாதை பகுதியில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள கொள்ளைப் பகுதிக்குள் தண்ணீர் தேடி நடுத்தர வயது மாடு ஒன்று வந்துள்ளது. அங்கு உள்ளே நுழைந்த மாடு குடிநீருக்காக தோண்டப்பட்ட காலி தொட்டிக்குள் தண்ணீர் இருக்குமென நினைத்து குடிநீர் குடிப்பதற்காக தவறுதலாக உள்ளே இறங்கியபோது தவறி விழுந்தது. சத்தம் கேட்டு அருகில் ...
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு சையது அம்மாள் மெட்ரி குலேஷன் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகியாக மாவட்ட தலைவர் சண்முகம் , மாவட்டச் செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் புதிய நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ளனர் . அதனை தொடர்ந்து செல்லதுரை அப்துல்லா , இன்ஸ்டின் ...
போப் பிரான்சிஸ் நேற்று காலமகாலமானதால், உலகளாவிய கவனம் இப்போது அடுத்த போப் யார் என்பதை நோக்கி திரும்பியுள்ளது. இதுவரை ஒரு போப்பைக் கூட கொண்டிராத அமெரிக்கா, ஒரு போட்டியாளரை முன்வைக்கக்கூடும் என்ற எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுமார் இரண்டு வாரங்களில், போப்பால் நியமிக்கப்பட்ட திருச்சபையின் மிக உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரிகளான கார்டினல்கள் கல்லூரி, ஒரு புதிய போப்பைத் ...
அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்துள்ளது. அதன்படி இந்தியாவுக்கு கடந்த 2ம் தேதி 26 சதவீதம் கூடுதல் வரி என்பது விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு என்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை தீவிரமாகி வரும் நிலையில் அதுபற்றி அமெரிக்கா பாசிட்டிவ்வான பதிலை தெரிவித்துள்ளது. அதன்படி டொனால்ட் டிரம்பின் நடவடிக்கையில் இருந்து ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்துள்ளார். இதனை சமாளிக்க இந்தியா உள்பட பல நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்படியான சூழலில் தான் சீனா, ரஷ்யா, இந்தியா உள்பட 10 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு இன்னும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்த அமைப்பு வேகமாக வளர ...
இன்று முதல் ஒரு யூனிட் ஜல்லி ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், எம் சாண்ட் ரூ.6 ஆயிரமாகவும், பி சாண்ட் ரூ.7 ஆயிரமாகவும் விலை உயரும்’ என அமைச்சர் துரைமுருகனுடன் நடந்த பேச்சு வார்த்தை பின்னர் கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் விதிக்கப்பட்ட சிறு கனிம நிலவரி மற்றும் ராயல்டி ...
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்று நிகழ்ந்த என்கவுன்ட்டரில் 8 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டம் லால்பனியா பகுதியில் உள்ள லுகு வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிஆர்பிஎப் அமைப்பின் ‘கோப்ரா’ கமாண்டோக்கள் மற்றும் மாவட்ட காவல் துறையினர் இணைந்து அப்பகுதியில் நேற்று அதிகாலையில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது ...













