அண்ணாமலை பெயரை சொல்லி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய பாஜகவினர்..!

கோவை மாவட்டம் அன்னூர் குமாரபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். ( வயது 53) இவரது மனைவி நாகமணி. இவர்களது மகள் திருமூர்த்தி ( வயது 26) இவர் கடந்த 20 23-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி அன்னூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதி உயிரிழந்தார் . திருமூர்த்தி விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக தனியார் காப்பீட்டு நிறுவனம் மூலம் கடந்த மே மாதம் ரூ. 50 லட்சம் நாகராஜ் குடும்பத்திற்கு கிடைத்தது. இதற்கிடையே திருமூர்த்தியின் தம்பி அருணாச்சலம் (வயது 23) என்பவர் சமூக வலைதளத்தில் தனது பெற்றோருடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் . வீடியோவில் எனது அண்ணன் விபத்தில் இறந்த போது எங்கள் பகுதியில் உள்ள பாஜ.க வை சேர்ந்த கோகுல் கண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி, ஆகியோர் சில உதவிகள் செய்தனர் .இதையடுத்து அண்ணன் விபத்தில் இறந்ததற்காக காப்பீட்டுத் தொகையாக ரூ. 50 லட்சம் கிடைத்தது .இதைய
டுத்து பாஜகவை சேர்ந்த கோகுல கண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோர் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரை சொல்லியும்,அவரால்தான் உங்களுக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது என்றும் கூறி . ரூ 10 லட்சம் பணம் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டனர். தொடர்ந்து தற்போது தேர்தல் வர உள்ளதால் செலவுக்கு பணம் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அண்ணாமலை பெயரைச் சொல்லி அவர்கள் மேலும் ரூ. 10 லட்சம் கேட்கின்றனர். தரவில்லை என்றால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை தொடர்ந்து நேற்று நாகராஜ் இது தொடர்பாக அன்னூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .இதன் பெயரில் அன்னூர் போலீசார் சம்பந்தப்பட்ட 3 பேர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..இது தொடர்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அன்னூர் காவல் நிலையத்திற்குமுகநூல் மூலம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் எனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.