பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசல் குறித்த விவாதம் நடைபெற்றது.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் எழுந்து, ‘துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பள்ளி பருவத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்’ என்று பேசினார். இதையடுத்து துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் எழுந்து, நான் ஆதி முதல் காங்கிரஸ்காரன். ஆனால் எல்லா கட்சிகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறேன்.
பாஜ, ஆர்எஸ்எஸ் குறித்து ஆய்வு செய்துள்ளேன். மஜத குறித்து ஆய்வு செய்து வருகிறேன் என்று பேசும்போதே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ‘நமஸ்தே சதா வத்ஸலே’ பாடலை பாடினார். உடனே எதிர்வரிசையில் அமர்ந்திருந்த பாஜ உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.