தூத்துக்குடி: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சென்னையிலிருந்து நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.
அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது; கடலூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி தேமுதிக மாநாடு நடக்கிறது. அதில் கூட்டணி குறித்த அறிவிப்பு இருக்கும். பாஜவினர், அதிமுக குறித்து விமர்சிக்க கூடாது என்று பாஜ மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் கூறி உள்ளார். கூட்டணி அமைந்த பிறகு சலசலப்பு வந்து விட்டால் கூட்டணி பிரிய வாய்ப்புள்ளது. எனவே, கருத்துகள் சொல்வதை பாஜ தலைமை கட்டுப்படுத்துகிறது. பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வந்தது போன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் நீதி அரசர்கள் விரைவில் உறுதியான தீர்ப்பை கால தாமதம் செய்யாமல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.