திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மோட்டு கொள்ளை பகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நல்லிணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வா. வேலு பேசுகையில், சமய நல்லிணக்கம் என்பது புத்தகத்தில் எழுதப்படும் வாசகம் மட்டுமல்ல,நாம் தினசரி மனித வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியது தான்.வீட்டிலே தொடங்கட்டும்…பள்ளியில் தொடரட்டும்…கோவில் வாசல்களில் ஒன்றுபடட்டும்…மசூதி வாசல்களில் புரிந்துகொள்ளட்டும்…தேவாலய வாசல்களிலும் நாம் ஒன்றுபட வேண்டும்.மனிதன் மனிதனாக இருந்தால்தான் இந்த நாடு சொர்க்கமாக இருக்கும் மனிதன் மாடாக மாறிவிட்டால், நாடு எப்படி சொர்க்கமாக இருக்கும்?” என்றார். மதவெறி பிடித்த ஒரு கூட்டம், இங்கு அலைந்து கொண்டே இருக்கிறது.அதனால் தான் தமிழ்நாட்டு முதலமைச்சர் சொல்லுகிறார், உங்கள் பாட்ஷா தமிழ்நாட்டில் என்றும் எடுபடாது அது அரசு நிகழ்ச்சி ஆனாலும் சரி, அரசியல் நிகழ்ச்சி ஆனாலும் சரி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி — உங்கள் பாட்ஷா இங்கே பலிக்காது. தமிழ்நாட்டில் எங்கள் பாட்ஷா தான் பலிக்கும்.மேலும் சொல்லப்போனால் எங்களது பாஷா எங்கள் பாஷா தான் எங்களுடன் இருப்பார்.அதனால் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களும் திராவிட முன்னேற்றக் கழகமும் என்றும் இணைந்தே பயணிக்கும்,”என்றார்.
மதவெறி பிடித்தவர்களின் பாட்சா இங்கு பலிக்காது.. எங்கள் பாட்ஷா தான் பலிக்கும்..









