கோவை அம்மன் குளம், பாரதி காலனி அருகே குப்பை குவியல் கிடந்தது .அந்த குப்பையில் ஒரு பெண் குழந்தை சிசுவுடன் தொப்புள் கொடி அறுபடாத நிலையில் கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தையின் உடலை வீசி சென்றது யார் ? என்பது தெரியவில்லை. குழந்தையின் முகம் வீங்கி இருந்தது .இந்த குழந்தை கள்ளக்காதலால் பிறந்த குழந்தையா ? அல்லது முறை தவறி பிறந்ததால் அங்கு வீசி சென்றார்களா? என்பது தெரியவில்லை . அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி .கேமரா மூலம் போலீசார் அந்த குழந்தையை வீசியது யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குப்பை தொட்டியில் பெண் குழந்தை சிசு உடல் வீச்சு..
