தமிழகத்தில் வரும் அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் சார்பில், தீபாவளியை ஒட்டி தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 18 மற்றும் 19 தேதிகள் முறையே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையாக வருவதால், ...

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 20 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள ஜெய்சால்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் 57 பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. நேற்று மதியம் 3 மணி அளவில் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த ...

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், பண்டிகையை கொண்டாட தேவையான பொருள்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். கடந்த சனி, ஞாயிறு நாள்களிலேயே சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள கடைத் தெருக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, மதுரை நகரில் உள்ள கடைவீதிகளுக்கு அருகே உள்ள ...

கேரளத்தில் கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் பள்ளியில் மாணவி ஹிஜாப் அணியத் தடை விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், எர்ணாக்குளம் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயம் நடத்திவரும் செயின்ட் ரீட்டா பப்ளிக் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், “தான் ஹிஜாப் அணிந்திருந்ததால், தன்னை வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை என்றும், தன்னிடம் ஆசிரியர்கள் மோசமாக நடந்துகொண்டதால், இனி ...

சென்னை: வரும் 20ம் தேதி தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர் புறப்பட தயாராகி வருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி தமிழகத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் 3 மடங்கு வரை அதிகரித்தது. இதனால் பயணிகள் நொந்து போயினர். இந்நிலையில் தான் இன்று தமிழக போக்குவரத்து துறை ...

கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ,சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் ஆகியோர் நேற்று ரத்தினபுரி கண்ணப்பன் நகர் சுடுகாடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்கு மறைவான இடத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் ஒரு கிலோ 720 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...

வால்பாறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்  வட்டக் கிளையின் பொதுக்குழு கூட்டம் வட்டக்கிளை செயல் தலைவர் கே.சோபியா தலைமையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில துணைத் தலைவரும் கருவூலம் மற்றும் கணக்குக் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத்தலைவர் கோ.சசீந்திரன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில மகளிரணி செயலாளரும் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் மற்றும் ...

கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது :- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் 1299 சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு குறித்து கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடபட்டது. இதற்கான தேர்வு டிசம்பர் மாதம் 21 -ஆம் தேதி நடைபெற உள்ளது .இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து பயிற்சி பெற்று ...

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர.இவர்களை குடும்பத்தினர் – உறவினர் பார்ப்பதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதிக்கபடுகிறார்கள். இந்த நிலையில் மதுரை ,மேலூர் அட்டப்பட்டியை சேர்ந்த அய்யனார் என்பவர் தனது தம்பி பாலா என்ற மதுரை பாலாவை பார்ப்பதற்கு நேற்று மத்திய சிறைக்கு வந்தார். அப்போது சிறை வளாகத்தில் ...

கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தவர் விஸ்வநாதன். இவர் கடந்த 30 ஆம் தேதி மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவருக்கு தமிழ்நாடு ஊர்க்காவல் படை சேம நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இதை இறந்தவரின் மனைவி விஜயலட்சுமியிடம் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் நேற்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோவை ...