கோவை கோட்ட வனத்துறை நிர்வாகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும் விடுதிகள் ரிசார்ட்டுகள், நட்சத்திர விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் காட்டு விலங்குகளுக்கு அச்சம் தரும் வகையில் அதிக சத்தம் எழுப்பும் படி ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. விடுதிகளில் பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கை நடத்தக்கூடாது . கேம்ப்பயர் ...
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை நேற்று (புதன்) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்ததுமேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான ...
நன்னிலம்: திராவிட பாரம்பரியத்தால் ஏழைகள், ஏழைகளாகவே உள்ளனா் என குற்றஞ்சாட்டி பேசினாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை. பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தமிழகத்தில் மேற்கொண்டுள்ள என் மண், என் மக்கள் எனும் நடைப் பயணத்தின் (பாத யாத்திரை) ஒரு பகுதியாக திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நடைப் பயணத்தில் அவா் ...
சென்னை: எனக்கு வாக்களித்த மக்களுக்காக நான் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்றேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தூத்துக்குடியில் நான் ஆய்வுக்காக போகவில்லை என்றும் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். தென் மாவட்டங்களில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட வந்த தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசு குறித்து செய்தியாளர்களிடம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ...
டெல்லியில் உள்ள சாணக்கியபுரி தூதரக வளாகத்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே செவ்வாய்கிழமை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் அமைந்துள்ள மத்திய இந்தி பயிற்சி நிறுவனத்திற்கு வெளியே உள்ள பச்சை நிற பெல்ட் பகுதியில் குண்டு வெடிப்பு நடந்த உடனேயே, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, ...
சென்னை: சென்னை – எண்ணூர் அருகே உள்ள பெரியக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் வசித்த மக்கள் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நல பாதிப்புக்கு ஆளாகினர். இதைத் தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் ...
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உயிரிழந்தார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்* உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தே.மு.தி.க தலைமை கழகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு விஜயகாந்த் ...
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று உருமாற்றமடைந்து கொண்டே இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பணிபுரிந்த டாக்டா் சௌமியா சுவாமிநாதன் கூறியிருந்தாா். அதனை உறுதிபடுத்தும் வகையில் ஜெ.என்.1 வகை தொற்று தற்போது இந்தியாவில் ...
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் கோபால் என்பவரது மகன் கிருஷ்ணன் (40). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் தனது தாயார் பெயரில் முசிறியில் சொந்தமாக ஒரு வீடும், ஒரு காலியிடமும் உள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கும் இதுவரை வருவாய் துறையில் இருந்து பட்டா வழங்கப்படவில்லை. எனவே, கிருஷ்ணன் தாயார் பெயரில் மேற்படி 2 ...
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : சென்னையில் இன்னொரு பகுதியில் அமோனியம் வாயு கசிவு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வரும் காலங்களில், இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதுபோன்று இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது முதல் முறையல்ல, பலமுறை ...













