முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் காங்கிரஸ் 2, தவெக 21 என மொத்தம் 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட இந்த அமைச்சரவையில் 20-30 வயதில் 2 பேரும், 30-40 வயதில் 9 பேரும் உள்ளனர். 28 வயது கமலி கால்நடைத் துறை அமைச்சராக இளம் அமைச்சராக உயர்ந்துள்ளார்; ...
தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை உள்பட பல இடங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு குறித்த கேள்விக்கும் அமைச்சர் நிர்மல் குமார் பதில் அளித்துள்ளார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏற்படும் அறிவிக்கப்படாத ...
இலகுரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானகரம், சூரப்பட்டு உள்பட 60க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ரூ.25 முதல் ரூ.100 வரை சுங்கக்கட்டணம் உயர்வதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தமிழ்நாட்டில் ...
திருவனந்தபுரம்: கண்ணூர் ரயில் நிலையத்தில் ஆள் அரவமின்றி ரயிலுக்காக காத்திருக்கும் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கேரள அரசியல் வரலாற்றில் வேறு எந்த முதல்வரும் செய்யாத ஒரு சாதனையை பினராயி விஜயன் படைத்துள்ளார் என்றால் அது மிகையல்ல. கேரளத்தில் தொடர்ந்து 10 வருடங்கள் முதல்வராக இருந்தவர் என்ற பெருமை ...
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பதவியேற்ற அமல்ராஜ் ஐபிஎஸ் யார் என்பதை பார்க்கலாம். இவர் இதுவரை கையாண்ட வழக்குகள் என்னென்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.முதல்வராக விஜய் பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் சென்னை மாநகர கமிஷனராக இருந்த அருண், தேர்தல் நேரத்தில் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக அபின் ...
மே10-ம் தேதி முதல்வர் விஜய் பதவியேற்ற போது, தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டது சர்ச்சையானது.வழக்கமாக, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்படும். நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக இசைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் ...
தமிழக அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள 23 அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமார், செங்கோட்டையன் ஆகியோரது இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், செங்கோட்டையனுக்கு இலாகா மாற்றப்பட்டு நிதித் துறைக்கு பதில் வருவாய்த் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 1. முதல்வர் விஜய் – பொது, பொது நிர்வாகம், ஐஏஎஸ், ...
தமிழகத்தில் தற்பொழுது முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக கூட்டணி அரசின் மந்திரி சபை விரிவாக்கத்தைத் தொடர்ந்து, தற்பொழுது அமைச்சரவையில் மேலும் இரு புதிய பவர்ஃபுல் அமைச்சர்கள் இணைக்கப்பட உள்ள அதிகாரப்பூர்வ அவசர அறிவிப்பை ஆளுநர் மாளிகை தங்குதடையின்றி வெளியிட்டுள்ளது. இந்த மெகா அரசியல் திருப்பத்தின்படி, ஆளுநர் அர்லேகர் அவர்களின் முன்னிலையில் ...
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில், ஒரு லட்சம் கார்னேஷன், ரோஜா மலர்களால் அமைக்கப்பட்ட பாம்பன் பாலம், தஞ்சை பெரிய கோயில், ஜல்லிக்கட்டு ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன. மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ...
மதுக்கடைகளை மூடும் தமிழக அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூர விதி பிரச்சனை இல்லை என்றாலும், மக்கள் நலன் கருதி மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விஜய் முதல்வராக பதவியேற்றதும், கோவில், கல்வி நிலையங்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டன. ...













