தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்குவங்கம் மற்றும் புதுவை ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி (23.04.2026) தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் களம் ...
கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (மார்ச் 23) நிறைவடைந்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி நாளை தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். நாளை கோழிக்கோடு வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார். அவருடன் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா ...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மூத்த மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின். தொழில் அதிபர், சமூக அலுவலர் மற்றும் அரசியல்வாதி என வலம் வருபவர் இவர். தற்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் இவர். அதாவது இவரின் சகோதரியைத்தான் ஆதவ் அர்ஜுனா திருமணம் செய்துகொண்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு ...
பிரதமர் நரேந்திர மோடி தனது ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் யோகா மீதான பற்று குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க சர்க்கரை பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார். யுவராஜ் துவா என்ற இளைஞர், தனது தந்தை சர்க்கரை உணவுகளை ...
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடக்கிறது. 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 16 வரை முழு ...
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கிறது. இதனையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள தமிழ்நாட்டில், தேர்தல் ஆணையம் அடுத்தடுத்த எச்சரிக்கைகளை கொடுத்து வருகிறது. அதன்படி, வாட்ஸ்அப் குழுக்களில் தேர்தல் விதிமுறை மீறல் நடைபெற்றால், சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் குழு அட்மினே முழுப்பொறுப்பு என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப் குழுக்களில் தேர்தல் ...
வல்லூறுகள் பாதுகாப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள நிபுணரின் பரிந்துரைகளைப் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் சூா்யகுமாா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில் 1980-களில் வல்லூறுகளின் எண்ணிக்கை சுமாா் 4 கோடி இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 90,000-ஆகக் குறைந்துவிட்டது. தமிழகத்தில் நீலகரி, தருமபுரி, ஈரோடு ...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் 9 நாட்களுக்கு பிறகு குற்றவாளியை காவல்துறைினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை முதல் குற்றவாளியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு ...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொடூர வெயில் அடித்து வருகிறது. இன்னும் ஏப்ரல், மே மாதங்களே வராத நிலையில், தற்போதே நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், நேற்று இரவு சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து சற்று குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மார்ச் 19 தமிழகத்தில் ...
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திருச்செந்தூர் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தபோது, தேர்தல் பறக்கும் படையினரால் வாகன சோதனை செய்யப்பட்ட சம்பவம் திருச்சுழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர ...













