கோவை பாராளுமன்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரி நிவேதா நேற்று 100 அடி ரோட்டில் உள்ள ஒரு நகைக்கடை முன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை சோதனை செய்தார். அவரிடம் 37 பாக்கெட் குட்கா, 5 பிராந்தி பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் நாச்சிபாளையம், விஜயபுரத்தைச் சேர்ந்த பத்மநாபன் ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் நேற்று குனியமுத்தூர் சுகுணாபுரம் மைக்கேல் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10 கிராம் உயர் ரகபோதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ...
கோவை : நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாதுகாப்புக்காக மத்திய துணை ராணுவ படையினர் ஏற்கனவே கோவை வந்துள்ளனர்.இவர்கள் கோவை – பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் கூடுதல் பாதுகாப்புக்காக ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து 4 கம்பெனி சிறப்பு காவல் படையினர் ரயில் மூலம் இன்று கோவை வந்தனர். இவர்கள் நாளை முதல் கோவையில் ...
கோவை அருகே உள்ள பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். மலை ஏறும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 பேர் இறந்துள்ளனர்.நேற்று மேலும் ஒருவர் இறந்தார். அவரது பெயர் ரகுராம் ( வயது 50) சென்னை முகப்பேர் (மேற்கு) பகுதியைச் சேர்ந்தவர். ...
கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமார் நேற்று மாலை அங்குள்ள குளத்துபுதூர் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார். அப்போது பைக்கில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 1 கிலோ 250 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள நம்பர் 4 வீரபாண்டி, பூங்கா நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகள் தர்ஷினி ( வயது 21) இவர் நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார் . அதே நிறுவனத்தில் சோமனூர் பக்கம் உள்ள மங்களம் பகுதியை சேர்ந்த திவாகர் (வயது 24) என்பவரும் வேலை ...
கோவை ரேஸ்கோர்சில் கிறிஸ்தவ தேவாலயம் உளளது. இந்த ஆலயத்தின் செயலாளராக இருப்பவர் ஆர். ஏ. பிரபாகர். இவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஆலய கட்டுப்பாட்டை மீறியதாக சஸ்பென்ட் செய்யப்பட்ட பாதிரியார் சார்லஸ் சாம்ராஜ், உதவி பாதிரியார் ராஜேஷ் உட்பட சிலர் நேற்று முன்தினம் ஆலயத்துக்குள் அத்துமீறி புகுந்தனர். அங்கிருந்த ...
கோவை தெப்பக்குளம் வீதியை சேர்ந்த ஒரு ராமகிருஷ்ணன் ( வயது 45) டிரைவர். இவருக்கு சொந்தமாக சின்னவேடம்பட்டியில் ரூ. 60 லட்சம் மதிப்பில் 10 சென்ட் நிலம் உள்ளது . அந்த இடத்திற்கான பவரை ராமகிருஷ்ணன் சின்ன வேடம்பட்டியை சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு கொடுத்து வைத்திருந்தார். அந்த இடத்தை சந்திரசேகர் தனக்குத் தெரிந்த குறிச்சியை சேர்ந்த ...
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி அம்சவேணி மற்றும் அதிகாரிகள் பூந்தமல்லியை அடுத்த கோலப்பஞ்சேரி 400 அடி சாலை டோல்கேட்டில் வாகன சோதனையில் பரபரப்புடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வேன் அதிரடி வேகத்தில் வந்து கொண்டிருந்தது. அந்த வேனை மடக்கி பிடித்தவர் வேனில் இருந்த வினோத் குமார் என்பவன் ...
திருச்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு திருநாவுக்கரசர் முயற்சி செய்த வேளையில் அது கிடைக்காமல் போனது இதனையடுத்து மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக அந்த தொகுதியும் ஒதுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் திருநாவுகரசர் இருந்து வந்தார். இந்த நிலையில் திருச்சி தொகுதி மக்களுக்கு தனது எம்பி பதவி காலத்தில் ...