சென்னை: தஞ்சை மாவட்டத்தில் நீட் தேர்வு தோல்வியால் தனுஷ் என்ற மாணவர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது என அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மாணவச் செல்வங்களே! இன்றியமையாத உயிரை இழக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் உங்கள் மனதில் வரக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “தஞ்சாவூர் மாவட்டம் சிலம்பவேளங்காடு பகுதியைச் சேர்ந்த ...
சதுரகிரியில் தொடர் மழை பெய்துவருவதால், பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூா் – மேகமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட சாப்டூா் வனச்சரகத்தில் புகழ் பெற்ற சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களுக்கு மலைப் பாதை வழியாக 10 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும். இங்கு பிரதோஷம், அமாவாசை, பெளா்ணமி ...
திருவனந்தபுரம் : கேரளாவில் உள்ள வங்கியில் அடகு வைத்த 25 கிலோ நகைகளுடன் திருச்சியைச் சேர்ந்த மேலாளர் தலைமறைவானார். கோழிக்கோடு வடகராவில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா கிளையில் அடகு வைத்த நகைகளுடன் மேலாளர் தப்பியதாக புகார் கூறப்படுகிறது. அடகு வைக்கப்பட்ட நகைகளுக்கு பதில் போலி நகைகளை வைத்துவிட்டு வங்கி மேலாளர் மது ஜெயக்குமார் தப்பியதாக ...
காங்கிரஸ் எம்.பி. அஜய் மாக்கன் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்து கூறியதாவது:-சம்விதான் ரக் ஷா (அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்) என்ற பெயரில் டெல்லி முழுவதும் இந்த 100 நாள் போராட்டம் நடத்தப்படும். வரும் நவம்பர் 27-ம்தேதி வரை டெல்லியின் 70 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இந்தப் போராட்டம் நடைபெறும். படிப்படியாக நாடு முழுவதும் போராட்டத்தை நடத்த ...
பெங்களூரு: மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. பார்வதியின் கோரிக்கைப்படி மைசூருவில் ...
இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 13 பேர் இன்று சொந்த ஊர் வந்து சேர்ந்தனர்.கடந்த ஜுன் 30 ஆம் தேதி பாம்பனிலிருந்து ஜார்ஜ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் 7 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகச் சொல்லி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ...
வாஷிங்டன்: மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட தவாஹிர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2008ல், நவ.26ம் தேதி இரவு மும்பையில் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களைக் குறிவைத்துத் தாக்குதலை நடத்தினர். பல இடங்களில் நான்கு நாட்கள் வரை நீடித்த இந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள் 166 ...
திருச்சிராப்பள்ளி தெப்பக்குளம் அருகில் உள்ள பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (17.08.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற சிறார் இதழ்களில் பங்களித்த மாணவ படைப்பாளிகளை பாராட்டும் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிறார் படைப்பாளிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், இணை இயக்குநர் அமுதவல்லி , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ...
கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை அவிநாசி ரோடு, ஹோப் கல்லூரி பகுதியில் ரயில்வே மேம்பாலம் அருகே நாளை ( ஞாயிற்றுக்கிழமை) முதல் உயர்மட்ட மேம்பால தூண் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அங்கு நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காந்திபுரத்தில் இருந்து லட்சுமி மில் சந்திப்பு ,எஸ். என் ...
கோவை அருகே உள்ள வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ( வயது 52) இவர் ராம் நகரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். கோவை ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை ...













