கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர்செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் ஆகியோர் நேற்று பீளமேடு,காந்தி மாநகர் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே ரோத்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு வந்த 4 சக்கர வாகனத்தை தடுத்து சோதனை செய்தனர். அதில்458 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக இதை ...
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை, புளியகுளத்தில் ஆசியாவிலேயே மிக பிரமாண்டமான விநாயகர் சிலைக்கு,பதினெட்டு வித திரவிய அபிஷேகம் செய்து, மணக்கும் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதிகாலையிலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வழிபட்டனர். அறநிலை துறை சார்பில் கோவில் செயல் அலுவலர் கனகராஜ் முன்னிலையில் பெரிய பட்டர் கார்த்திகேயன் ...
கோவை மாநகர பகுதியில் விபத்துக்கள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் பல இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு குடிபோதையில் வாகனங்கள் ஒட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் முக்கிய பகுதியான அவினாசி ...
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட நரசிபுரம் ஊராட்சி, வெள்ளையங்கிரி மலை அடிவார பகுதியில் ஜக்கி வாசு தேவ் பல ஏக்கர் பரப்பளவில் மிக பெரிய யோகா மையம் நடத்தி வருகிறார். இந்த ஈஷா யோகா மையத்தில், ஆன்மீகம், யோகா, தியானம், போன்றவை கற்பிக்கபடுகின்றனர். இது தவிர ஈஷா சுற்றியுள்ள கிராமபுற மக்களின் வாழ்வாதாரம் மேம்பட ...
கோயம்புத்தூர் மாநகராட்சி கலையரங்கத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கான “தொடுவானம்” விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி கே.ஈஸ்வரசாமி ,கோவை கணபதி பா.ராஜ்குமார், திமுக வடக்கு மாவட்ட ...
கோவை செப்டம்பர் 7 விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது . இதையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் 2,236 சிலைகள் வைத்து வழிபாடு நடக்கிறது. இதனால் மாவட்டம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . கோவையில் இந்து அமைப்புகள் பா.ஜ.க மற்றும் பொதுமக்கள் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 708 சிலைகளை பிரதிஷ்டை ...
முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதார தினமான விநாயகர் சதுர்த்தி நன்னாளில் விநாயகரை நம்முடைய வீட்டிற்கு அழைத்து, உபசரித்து, அவரது அருளை பெற்றிடுவோம். விநாயகர் நம்முடைய வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி, மகிழ்ச்சியை அளித்திடுவார். இதனையொட்டி, விநாயகர் சதுர்த்தியை ஏன் கொண்டாடுகிறோம்..? அதன் வரலாறு என்ன..? விநாயகருக்கு எப்படி யானை முகம் வந்தது.? உள்ளிட்ட ...
ஆன்மீக சொற்பொழிவு நடந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்த நிலையில், அசோக் நகர் காவல் உதவி ஆணையர் பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறார். சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகத்தினர் ...
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள திவான்ஷா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வா என்ற செல்வராஜ். ( வயது 45)தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவர் கடந்த 2022- ம் ஆண்டு அவருடன் வேலை பார்த்த மகாலிங்கம் (வயது 30) என்பவரிடம் மது குடிக்க பணம் கேட்டார் . அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்து மகாலிங்கத்தை அங்கு ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி ( வயது 39 ) இவர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தனியார் அமைப்பு சார்பில் நம்ம ஊர் – நம்ம பள்ளி என்ற திட்டத்தில் அறிவியல் செய்முறை வகுப்பு எடுத்து வந்தார். சம்பவத்தன்று 7-ம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு பாடம் ...













