தாம்பரம்: பொதுமக்கள் வாகனங்களை பாலத்தின் மீது நிறுத்த எவ்வித தடையும் இல்லை, அபராதம் வசூலிக்கபடாது என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவிப்பு. உதவி தேவைபடும் பட்சத்தில் கட்டுப்பாட்டு அறை எண் கொடுக்கபட்டுள்ளது. பாலங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக வதந்தி பரவி வருகிறது . அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். ...
திருச்சி மாவட்டம் புலிவலம் கரட்டாம்பட்டியில் அரசு நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில் அரசு அனுமதியோடு மதுராபுரியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் டிஎஸ்கே என்ற பெயரில் கல்குவாரி ஒன்றை நடத்தி வருகிறார். சுமார் ஐந்து ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து இந்த கல்குவாரியை அவர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் மண்ணச்சநல்லூர் தொகுதி ...
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான இந்த கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. இது குறித்தான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியீட்டுள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளுக்கும் கால் ஆண்டு பரீட்சை முடிந்து தற்போது இரண்டாம் பருவம் தொடங்கியுள்ளது. இதனைத்த தொடர்ந்து ஆண்டின் இறுதியில் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளுக்கு தயாராகும் ...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேலை பார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை: தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்.14) மஞ்சள் அலர்ட், நாளை ...
சேலம்: பருவ கால நோய்களைக் தடுக்க தமிழகம் முழுவதும் நாளை ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகள் துவக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதன்படி சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் ...
கேரளாவில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல் மற்றும் மகரவிளக்கு பூஜையின் போது பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து, ‘ஆன்லைன் மூலம் தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த ஆண்டு அனுமதிக்கப்படுவர்’ என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் சபரிமலைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என ...
சென்னை: சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை எதிரொலியாக, முன்னேற்பாடு நடவடிக்கையாக, சென்னையில் 50 இடங்களில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழையின்போது தமிழ்நாடு முழுவதும், ஒரு உயிர்சேதம் கூட ஏற்படாத வண்ணம், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம், இன்று ...
சென்னை: சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (14.10.2024) தலைமைச் செயலகத்தில், 15.10.2024 முதல் 17.10.2024 வரை சென்னை மற்றும் ...
திருச்சி கருமண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம். கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கி பேசும்போது நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து உழைத்தால்தான் 2026 இல் அண்ணன எடப்பாடியாரின் அதிமுக ஆட்சி அரியணை ஏறும் என்றார். ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பேசும் பொழுது நாம் எல்லோரும் ஒன்றாக இருந்து அதிமுகவில் மாணவர்களை சேர்க்க ...
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டார் கோவில் தெருவில் வசிக்கும் நரிக்குறவ இன மக்கள் 40 பேர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள் இவர்கள் வீடு கட்டிக் கொள்ள அரசு பட்டா வழங்கியிருக்கிறது. எத்தனையோ முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை . இன்று நடந்த மாவட்ட ஆட்சியர் மக்கள் ...













