இன்று அக்டோபர் 26ம் தேதி தமிழகம் முழுவதும் சிலிண்டர் டெலிவரிமேன்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். கேஸ் ஏஜென்ஸிகளின் கீழ் சிலிண்டர் டெலிவரி செய்யும் டெலிவரிமென், மெக்கானிக், டிரைவர்கள், குடோன் கீப்பர், லோடுமேன்கள், பணியாளர்கள் என பலரும் வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை பல்வேறு தருணங்களில் முன்வைத்து வந்த நிலையில், ...

புதுடெல்லி: ரத்தன் டாடா எழுதி வைத்த உயில் விவரங்கள் வெளியான நிலையில், அதில் தனது சமையல்காரர், உதவியாளர், வளர்ப்பு நாய்க்கும் அவர் சொத்துக்களை ஒதுக்கியுள்ளார். இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா கடந்த 9-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இந்த நிலையில், அவர் எழுதி வைத்த உயில் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ரத்தன் டாடாவுக்கு ...

பெங்களூரில் இருந்து கோவை நோக்கி காரில் வந்துக் கொண்டிருந்த 3 கல்லூரி மாணவிகள், நேற்று நள்ளிரவு அவிநாசி அருகே வந்துக் கொண்டிருந்த போது லாரி மீது பயங்கர வேகத்தில் மோதி, கார் அப்பளமாய் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 3 கல்லூரி மாணவிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். இதில் 2 ...

போபால்: மனித உரிமை மீறலைத் தடுக்க மாநிலம் முழுதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களின் அனைத்து அறைகளிலும் மூன்று மாதங்களுக்குள் சிசிடிவி கேமராக்களை நிறுவ மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள பாலுமடா ...

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து கடந்த 4-ம் தேதி பூமி பூஜைக்கு பந்தல் கால் நாடும் பணி நடைபெற்றது. மாநாட்டு திடலில் இருந்து தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்சி கொடிகள், சீரியல் விளக்குகள், ...

மேட்டூர்: ‘வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் இருக்கும்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த மேல்சித்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: நாமக்கல்லில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, அதிமுகவின் வாக்குகள் சரிந்து விட்டதாகவும், ...

இஸ்லாமாபாத்: வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் வட மேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் நகருக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகளுக்கு எதிராக நேற்று (அக். 24) தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் ...

நாடு முழுவதும் தற்போது பாஜக கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக கட்சி கூட்டணி ஆதரவுடன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவடைந்த பிறகு தற்போது பாஜக கட்சிக்கு நாடு முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல ...

பெங்களூரு: கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களது வீடுகளை தீவைத்து கொளுத்திய வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனையும், 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கங்காவதி அடுத்த மரகும்பி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (42). இவர் அங்குள்ள திரையரங்கில் ...

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவின் ஹமாஸ் படைத் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் போரை விட்டுவிட்டு தங்கள் நாட்டு பிணயக் கைதிகளை ஒப்படைக்க வேண்டும் என இஸ்ரேல் கூறியிருந்தது. அதேபோல், போரை நிறுத்த ஹமாஸ் அமைப்பினரும் சில நிபந்தனைகளை விதித்திருந்தனர். இதனால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் முடிவுக்கு வரும் ...