திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணபதி மகன் விஷ்ணு (24). இவா் கொடியாலத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். திண்டுக்கரை அருகே பேருந்து வந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 5 போ் கொண்ட கும்பலில் ஒருவா், பேருந்தில் ஏறி விஷ்ணுவை ...

இந்தியா முழுவதும் 4.5 லட்சம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த வங்கி கணக்குகள் அனைத்தும் ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலம் விதவிதமான முறைகளில் மோசடிகள் நடப்பது தொடர்கதை ஆகி வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த மோசடி காரணமாக 17 ஆயிரம் கோடி பணம் ஆன்லைன் மூலம் ...

அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை என்றும், அதிமுகவுடன் கூட்டணி என்று வதந்தி பரப்புவதாகவும் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் ...

சுனிதா வில்லியம்ஸ் மிக நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கியிருப்பதால் , அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஏவப்பட்ட போயிங் நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களுக்கு வீரர்களை அழைத்துச் செல்வதை சோதனை செய்யும் வகையில், இரண்டு விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சக விண்வெளி வீரர் ...

மணிப்பூரில் கலவரம் தொடங்கி ஒன்றரை ஆண்டைக் கடந்தும், கலவரத்தின் பதற்றமோ அல்லது மணிப்பூர் மக்கள் ஆட்கொண்டிருக்கும் வஞ்சிப்போ நீங்கப்படவில்லை. இஸ்ரேல் – காஸா, ரசியா – உக்ரைன் என மற்ற நாடுகளுக்கு இடையே நடைபெறும் போருக்கு கருத்து தெரிவிக்கவும், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவும் நேரம் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மோடி, ...

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசில் சென்றடைந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா, தென்அமெரிக்க நாடான பிரேசில், மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான கயானா ஆகிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்கு முதலில் சென்றார். கடந்த 17 ஆண்டுகளில் ...

கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி நேற்று உக்கடம் – சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 3 கிலோ 662 கிராம் எடைகொண்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.. இது தொடர்பாக இதை விற்பனை செய்த ...

கோவை அருகே உள்ள வெள்ளலூர், மகாலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் ( வயது 38) சம்பவத்தன்று இவர்களது வீட்டில் பையில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து தங்கராஜ் போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் தன் வீட்டுக்கு தச்சு வேலைக்கு வந்த சக்தி என்பவர் மீது ...

கோவை மாவட்டம் அன்னூர், ஒட்டர் பாளையம்,பக்கம் உள்ள பூலுவபாளையத்தை சேர்ந்தவர் பிரதீப் ( வயது 38 )ஏ.சி. மெக்கானிக்.இவர் நேற்று முன்தினம் விளாங்குறிச்சி ரோடு காந்தி வீதியில் உள்ள தினேஷ் என்பவரது வீட்டில் ஏ.சி.மிஷின் பழுது பார்க்க சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் ...

கோவை ராமநாதபுரம் திருச்சி ரோடு சந்திப்பில் புனித ட்ரினிட்டி கத்தோலிக்க ஆலயம் உள்ளது . இங்குள்ள மாதா சிலை முன் வைத்திருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்து 2000 ரூபாய் யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஆலய செயலாளர் ஜெய்சன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் . சப் இன்ஸ்பெக்டர் சத்யா வழக்கு பதிவு ...