சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 151 மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகள் , சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாண விகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சூலூர் பேரூராட்சி மன்ற தலைவர் தேவி மன்னவன், துணைத் தலைவர் கணேஷ் மன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, கிரித்திகா ஆகியோர் 151 ...
கல்வி கடவுள் சரஸ்வதி தேவியின் உருவம் பதித்த ஜாக்கெட் அணிந்து, பெண் சேர்மன் நிகழ்ச்சிக்கு வந்தது பேசு பொருளாகி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படப்பை பகுதியில், பள்ளிக்கல்வித் துறையின் புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழாவில், அமைச்சர் தா.மோ. அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை ...
இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். நீதிமன்றங்களில் இ பைலிங் முறை அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த இ பைலிங் முறையை நடைமுறைப்படுத்த கூடாது என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக ...
கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம் விதிக்க டெல்லியில் உள்ள எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம் (டெரி) ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. கோவை மாவட்டம் சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமயம்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளால் மலையடிவாரம் ...
கோவையில் அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழுவின் கோவை மாநகர செயலாளர் மோகன்ராஜ் இல்ல விழா நடந்தது. இதில் தொண்டர்கள் மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இந்த விழாவில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார். அப்போது திருமண வீட்டில் இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. தேசிய ஜனநாயக ...
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 13 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அலுவலகம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. வெடிகுண்டு மிரட்டல்களை தொடர்ந்து ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மாவட்ட ஆட்சியர் ...
கரூர் சிபிஐ அதிகாரிகள் தங்கி உள்ள சுற்றுலா மாளிகையில், கரூர் மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் ஐந்து பேர் சிபிஐ முன் ஆஜராகினர். கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி,, தமிழக வெற்றி கழக ...
சிபிஐ விசாரணை கண்காணிப்பு குழுவினரிடம் புகார் மனு அளிக்க வந்த பாதிக்கப்பட்ட பொதுமக்களை, இரண்டாவது நாளாக 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வைத்ததால் கோபமடைந்தவர்கள், சிபிஐ அதிகாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய்ரஸ்தோகி, மற்றும் ...
கோவை பாரதியார் பல்கலைக் கழக விதிமுறைகள் மீறிய, முன்னாள் பொறுப்பு பதிவாளர் ரூபா குணசீலனை,பணியிடை நீக்கம் செய்து, பதிவாளர் ராஜவேலு நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்தார். கோயம்புத்தூர் மருதமலை பகுதியில் பாரதியார் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 39 துறைகளில் முனைவர் பட்டம் உள்பட 54 முதுகலை படிப்புகள் உள்ளன. இந்த பல்கலைக் கழகத்தின் ...
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை, தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் பலருக்கு சரிவர படிவம் கிடைக்கவில்லை, படிவத்தை நிரப்ப தெரியவில்லை, சிறப்பு முகாம்களிலும் தீர்வு கிடைக்கவில்லை என பலரும் திண்டாடி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பது குறித்து, நீங்கள் இந்த ...













