சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று டெல்லி செல்ல உள்ளார். இதற்காக டெல்லி போலீசிடம் பாதுகாப்பு கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், 3 நாள் வரை விஜய் சிபிஐ ...

அனுமதி இன்றி குடோனில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. ஈரோடு அருகே உள்ள சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபு. தனியார் சர்க்கரை ஆலையில் வேலை செய்து வரும் இவர், தீபாவளி பண்டிகையின் போது தனது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.கடந்த தீபாவளி பண்டிகைக்காக கொள்முதல் செய்த பட்டாசுகளை விற்பனை செய்துவிட்டு, மீதமுள்ள 15ஆயிரம் ரூபாய் ...

நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் வேகம் பிடித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு பணிகள் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு, இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதன் செயல்முறை ...

பெண்களுக்கான மாரத்தான் போட்டிக்கான டி- சர்ட் மற்றும் பதக்கங்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையர்  N. கண்ணன் டி- சர்ட் மற்றும் பதக்கங்களை அறிமுகப்படுத்தினார். ஜெம் அறக்கட்டளை சார்பில் , கோயம்புத்தூர் மகளிர் மாரத்தான் போட்டியின் 3 வது பதிப்பு  பிப்ரவரி 22, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று, ஜெம் மருத்துவமனை வளாகத்தில் ...

கோவை ரயில் நிலையம் சந்திப்பு நடைமேடைகளில், உடல் மசாஜ் செய்யும் ஸ்பாக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய தேவையான பால் பூத்துகள் அகற்றப்பட்டுள்ளதற்கு, கோயம்புத்தூர் சிட்டிசன் வாய்ஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆவின் நுகர்வோர் ஆலோசனை குழு கூட்டத்தில், கோயம்புத்தூர் சிட்டிசன் வாய்ஸ் அமைப்பினர், மக்களின் அத்தியாவசிய தேவையான பால் பொருட்கள் ...

கல்லூரி மாணவ மாணவிகள், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை, கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடிய மாணவ மாணவிகள், பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து பொங்கல் வைத்தனர். ...

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, முழு கரும்பு, வேட்டி சேலை, சர்க்கரை, மற்றும் 3000 ரூபாய் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அதனை ...

எஸ்.ஐ.ஆர் படிவங்களை முறையாக சமர்ப்பிக்காதவர்களுக்கு, வாக்காளர் பதிவு அலுவலர் மூலம் அறிவிப்பு வழங்கப்படும். 13 ஆவணங்களில் ஒன்றை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட நாயகி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், எஸ். ஐ.ஆர் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. வாக்காளர்களின் முகவரிகள் சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் அவர்கள் ...

கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு,  ஆகியவை காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது என காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார். கோவை லீ மெரிடியன் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த அவர்,செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாக பலவீனமாகவே சென்று கொண்டிருக்கிறது என்றும் ,அதனை பலப்படுத்த ...

135 ஆண்டுகள் பழம் பெருமை வாய்ந்த கோவை கௌமார மடாலயத்தை நிறுவிய திருப்பெருந்திரு. இராமானந்த சுவாமிகளின் 69-வது ஆண்டு குருபூஜை விழா, தண்டபாணி சுவாமிகளின் நூல்கள் வெளியீட்டு விழா, கல்வி, இசை, சமூக சேவைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா, கோவை சின்னவேடம்பட்டி  கௌமார மடாலய வளாகத்தில் உள்ள குமரகுருபர ...