மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த மாமியாரை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி – மருமகன் உட்பட 2 பேர் கைது..!

கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை ஆனையங்காடு வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வபது 48) இவரது மருமகன் காரமடை காமராஜ் நகர் சேர்ந்த சுதாகர் (வயது 30)இவர் நேற்று தனது நண்பரான தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் (வயது 28) என்பவருடன் கள்ளிமடையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார்.மாமியார் கிருஷ்ணவேணியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் மறுத்ததால் மருமகள் சுதாகர் தனது நண்பர் ராஜ்குமாருடன் சேர்ந்து மாமியாரின் கழுத்தை நெறித்து மிரட்டி அவரிடம் இருந்த 300 ரூபாயை பறித்துக் கொண்டு சென்று விட்டனர். இது குறித்து கிருஷ்ணவேணி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி வழக்கு பதிவு செய்து கிருஷ்ணவேணியின் மருமகன் சுதாகர் அவரது நண்பர் ராம்குமார் ஆகியோரை நேற்று கைது செய்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.