கோவையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் முற்றிலும், உண்மையும், உத்தமமாய் இறை மைந்தன் இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமான நற்காரியங்களை சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் தொடர்ந்து செய்து கொண்டும். அனைத்து மத தலைவர்களோடும், மத நல்லிணக்கத்தோடும், பயணித்துக் கொண்டிருக்கும், அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத் தலைவர் *கோவை.சி.எம்.ஸ்டீபன் ராஜ்* அவர்களுக்கு, கர்நாடக மாநிலம் கே.ஜி.எஃப் சட்டக் கல்லூரியின் முதல்வர் *டாக்டர்.ஜி.மேத்யூஸ்* அவர்களும், மற்றும் அகில இந்திய அம்பேத்கர் கல்வி மற்றும் சமூக நீதி சங்கத்தின் பொதுச்செயலாளர் *கே.ராஜா*, மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் *எஸ்.ஏ.சேகுலர்*, அனைத்து சமய மத நல்லிணக்க பேரவையின் மாநில அமைப்பாளரும், சாம்பவ குல வேளாளர் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் *ஜி.கோவிந்தசாமி* ஆகியோர் உள்பட, சால்வை அணிவித்து, *”சேவை செம்மல்”* விருது வழங்கினார்கள். மேலும் இந்த மாநாட்டில் அகில இந்திய உழைப்பாளர் மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் *எண்.ஜோதி*, மாநில பொதுச் செயலாளர் *வி.பாலாஜி* ,மாநில இணை ச்செயலாளர் *என்.அரிதாஸ்*, மாநில துணைச் செயலாளர் *சி.ஆனந்தன்*, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் *எம்.சி.வில்லியம்*, ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் *டாக்டர்.முகமது சாதத்துல்லா*, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் *பி.சகிலா* திருப்பத்தூர் நகரச் செயலாளர் *ஏ.ராஜா*, *பி.நசீர் உசேன்*,*கே.காட்டயன்* ,*எஸ்.திலகவதி*, *எம்.பரமேஸ்வரி*,*இ.வளர்மதி*, *எம்.வாணி ராஜா* ,*ஆர்.குமுதினி* உள்பட ஏராளமான சமூக ஆர்வலர்கள், சிறுபான்மை நல அமைப்பினர், பொதுமக்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான தாய்மார்களுக்கு புடவை, போர்வைகள் வழங்கப்பட்டதில் அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் சார்பில் கௌரவ ஆலோசகர் *லயன் பி.அருள் டி’சில்வா* 50 தாய்மார்களுக்கு புடவைகள் வழங்கினார். மற்றும் அனைத்து சமூக இயக்கங்களும் இஸ்லாமிய, மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை அமைப்பின் தலைவர்களும் ஒன்று கூடி நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய வியூகம் அமைத்து, மாபெரும் வெற்றி காண்போம் என தீர்மானம் நிறைவேற்றி அனைத்து இயக்கங்களின் தலைவர்களும் தங்கள் கரங்களை இணைத்து உயர்த்தி உறுதிமொழி ஏற்றனர். மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு, மற்றும் அனைத்து தேவைகளையும் மாநாட்டின் பொறுப்பாளர் *ஜி. மாசிலாமணி* செய்திருந்தார் முடிவில் *எஸ்.சாம்சன் பிரியா* நன்றி கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் *அகில இந்திய உழைப்பாளர் மக்கள் கட்சியின்* நிறுவன தலைவர் *பாரத ஜோதி.வீ.ஏ.ஜார்ஜ்* அவர்கள் தலைமையில் நடந்த மாநில பாதுகாப்பு மாநாட்டில்,
