காதலியுடன் தகராறு… காதலன் தூக்கிட்டு தற்கொலை..

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் தன்ராஜ் பஸ்வான் ( வயது 18) இவர் துடியலூர் விஸ்வநாதபுரம், , கலிங்க நகர் பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார் .இவர் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். நேற்று காதலியுடன் செல்போனில் நீண்ட நேரம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாராம். பிறகு விஸ்வநாதபுரம் கலிங்க நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். .இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .சப் இன்ஸ்பெக்டர் குரு கணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.