பிச்சை எடுப்பதில் ஏரியா தகராறு… முதியவரை மரகட்டையில் அடித்துக் கொலை… பிச்சைக்காரன் தலைமறைவு..!

கோவை ஆர் .எஸ் . புரம் காமராஜபுரம் சந்திப்பில் உள்ள ஒரு கடை முன் நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தலையில் பலத்த காயத்துடன் படுகொலைசெய்யப்பட்டு கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் ஆர். எஸ். புரம் .காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் கொலையானவர் பெயர் சீனிவாசன் ( வயது 60 )என்பதும் அந்த பகுதியில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரிய வந்தது கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சீனிவாசனுக்கும் வேல்முருகன் என்பவருக்கும் பிச்சை எடுப்பதில் ஏரியா தகராறு ஏற்பட்டது .இது தொடர்பாக போலீசார் சீனிவாசனை எச்சரித்து சூலூர் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சீனிவாசனுக்கும்,வேல் முருகனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது .இந்த நிலையில் சீனிவாசன் மீண்டும் ஆர். எஸ். புரம் பகுதிக்கு வந்து பிச்சை எடுத்ததாக தெரிகிறது. இது வேல்முருகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று அதிகாலையில் அங்குள்ள கடை முன் தூங்கிக் கொண்டிருந்த சீனிவாசனை மரகட்டையில் அடித்து கொலை செய்து விட்டு வேல்முருகன் தப்பி ஓடி விட்டார்.தப்பி ஓடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகிறார்கள்.