கோவை மதுக்கரை அருகே சேலம் -கொச்சின் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து சோதனை சாவடி உள்ளது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த சோதனை சாவடியில் விதிமுறைகளை மீறி பணம் வசூலித்து வருவதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று மாலை திடீரென அங்கு வந்தலஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்த ஊழியர்களின் செல்போன்களை வாங்கி கொண்டு அலுவலக போன் இணைப்பையும் துண்டித்தனர். தொடர்ந்து அலுவலக கதவை மூடி விட்டு அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதோடு அங்குள்ள பீரோ, மேஜை , குப்பைத்தொட்டி ஆகியவற்றில் சோதனை செய்தனர். அப்போது அதில் கணக்கில் வராத பணம் ஏதேனும் உள்ளதா? என சோதனை செய்தனர். ஆனால் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இந்த சோதனை தொடர்பான தகவல் முன்கூட்டியே தெரியவந்ததால் சோதனைசாவடி ஊழியர்கள் உஷார் அடைந்தனர் .இதனால் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மதுக்கரை போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை.!!
