அம்மாடியோவ்!! இணையத்தில் வைரலாகும் தோனியின் பைக், கார் கலெக்‌ஷன்… மிஸ் பண்ணிடாதீங்க தல ரசிகர்களே..!!

தோனியிடம் என்ன பிடிக்கும் என்று கேட்டால், அவரது தலைமை பண்பு, தோல்வியை ஒப்புக்கொள்ள விடாமுயற்சி, பினிஷிங் ஸ்டைல், மின்னல் வேக ஸ்டெம்பிங் என ரசிகர்கள் ஒரு பட்டியல் சொல்வது போல, தோனிக்கு என்ன பிடிக்கும் என அவரிடம் கேட்டால், கண்டிப்பாக அவரது கார் மற்றும் பைக் சேகரிப்பின் பட்டியலை சொல்வார் என்றால் அது மிகை ஆகாது.

இந்நிலையில் தற்போது கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்டுள்ள தோனியின் பைக் கலெக்ஷன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வெங்கடேஷ் பிரசாத்தும், இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சுனில் ஜோஷி இருவரும் ராஞ்சியில் உள்ள தோனியின் பண்ணை வீட்டிற்கு (ஜூலை 18) சென்றுள்ளனர். அப்போது, கார் மற்றும் பைக்குகள் நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கு தோனி இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு எண்ணற்ற கார் மற்றும் பைக்குகள் நிற்பதைப் பார்த்த வெங்கடேஷ் பிரசாத் மற்றும் சுனில் ஜோஷி இருவருமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். இதனை வெங்கடேஷ் பிரசாத் வீடியோவாக எடுத்து அவரது ட்வீட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

இதனை வீடியாவாக பதிவு செய்த தோனியின் மனைவி எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டப்போது, அதற்கு பதிலளித்த அவர்கள் “ஆச்சரியமாக உள்ளது. ராஞ்சிக்கு நான்காவது முறையாக வருகிறோம். ஆனால் இந்த இடத்தைப் பார்க்கும்போது பைக்குகளின் மீது தோனி எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. இந்த இடத்தை பார்ப்பதற்கு பைக் ஷோரூம் போல் இருக்கிறது”என்று அந்த வீடியோவில் இருவரும் கூறியிருக்கின்றனர்.