கோவையில் தி.மு.க வினர் சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டர்களால் மீண்டும் அரசியல் கட்சியினர் இடையே மோதல் உருவாகும் சூழல் உருவாகி உள்ளது.கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசியல் கட்சிகள் (தி.மு.க, பா.ஜ.க போன்றவை) இடையே தொடர்ந்து சர்ச்சை போஸ்டர் மோதல்கள் நடந்து வந்தது, இதனால் போராட்டங்களும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று பதற்றமான சூழ்நிலை உருவானது. இதை அடுத்து சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை உருவாகி வந்ததால், மாநகராட்சி போஸ்டர் தடை விதிக்கப்பட்டது.
காவல் துறையினர் அச்சுக் கூடங்கள் மற்றும் போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் இருந்தனர், மேலும் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தனர்.
இந்நிலையில் தற்பொழுது கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் *எந்த ஷா… வந்தாலும்… தமிழ்நாட்டில் குஸ்கா தான் ….* என்று அமித் ஷாவை விமர்சிக்கும் விதமாக மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளது.
மீண்டும் சர்ச்சைக்குரிய வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டும் கலாச்சாரம் மீண்டும் கோவையில் தொடங்கி உள்ளது. இதனால் மீண்டும் அரசியல் கட்சியினர் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.இதனை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கோவையில் அமைதி நிலாவும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .









