கோவை, கே ஜி சாவடி அருகே கேரளா – பாலக்காடு செல்லும் எல்என்.டி பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை 6 மணிக்கு அந்த வழியாக சென்ற லாரி கோவை நோக்கி வந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து அறிந்ததும் க.க.சாவடி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்த வாலிபர் பெயர் சுனில் ( வயது 31 ), கேரளா மாநிலம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் என தெரிய வந்தது. சுனில் கோவை பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு இன்று அதிகாலை கேரளாவில் இருந்து புறப்பட்டு கோவைக்கு வந்த போது இந்த விபத்து நடந்தது தெரியவந்தது.
*கோவை க.க.சாவடி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி ஆம்புலன்ஸ் டிரைவர் பரிதாப உயிரிழப்பு !!!*
