ஆகம விதியில்லாத கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் – உச்சநீதிமன்றம் உத்தரவு.!!

மிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகின்றது. இதனை எதிர்த்து, ஆகம விதிகளை கடைப்பிடிக்கும் சில கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்கக் கூடாது என ஆதி சைவ சிவாச்சாரியர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குடன், அனைத்து கோவில்களிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற ஒரு மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில், 2,500க்கும் மேற்பட்ட அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான தடையை நீக்கவேண்டும் என வாதிடப்பட்டது.

மனுதாரர் தரப்பு, ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்கள் குறைவாகவே உள்ளன என்றும், அந்தக் கோவில்களில் மட்டும் அந்தந்த ஆகமக் கோட்பாட்டுக்கேற்ப நியமனம் செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆகம விதிகள் பொருந்தாத கோவில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், ஆகமம் மற்றும் ஆகமம் அல்லாத கோவில்களை மூன்று மாதங்களில் அடையாளம் காண தமிழக அரசுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.