நீலகிரி மாவட்டம் அதிமுக கழகத்தின் செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி அவர்களின் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி டி வினோத் முன்னிலையில் உதகை மற்றும் கோத்தகிரியில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் உதகை தேவாங்கர் திருமண மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக மாற்றுக் கட்சி மற்றும் அதிமுகவில் புதியதாக இணையும் தொண்டர்கள் இளைஞர்கள் இணைக்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ் பி வேலுமணி அவர்களை உதகை நகர செயலாளர் சண்முகம் தலைமையில் பட்டாசு வெடித்து மேலத்தளங்களுடன் கழக நிர்வாகிகள் வரவேற்றனர், நீலகிரி மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி டி வினோத் பூச்செண்டுகள் கொடுத்து வரவேற்றார். மற்றும் உதகை நகர செயலாளர் சண்முகம் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து கழக அமைப்பு செயலாளர் கே ஆர் அர்ஜுனன் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியாக ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சி தொடர்ச்சியாக
முன்னால் அமைச்சர் சேம வேலுச்சாமி , கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன், கழக அமைப்புச் செயலாளர்கள் கே ஆர் அர்ஜுனன், புத்திசந்திரன், மாநில வர்த்தக அணி செயலாளர் சஜீவன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்தி A ராமு, மாவட்ட இணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், உதகை நகரச் செயலாளர் சண்முகம், குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார், கூடலூர் நகர செயலாளர் அனுப்கான், பேரூராட்சி செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் குமார், பெல்லி, ஆகியோர் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் விடுதலை சிறுத்தை திமுக கட்சிகளில் இருந்து 2500 உறுப்பினர்கள் கோத்தகிரி பகுதியில் இணைந்துள்ளனர். மற்றும் உதகையில் 500க்கும் மேல் திமுக விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்தும், புதிய இளைஞர்களும் அஇதிமுகவில் முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி கொறடா எஸ்பி வேலுமணி அவர்கள் முன்னிலையில் இணைந்தனர், புதிதாக இணைந்த உறுப்பினர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்றார், அதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட உதகை சீனிவாச பெருமாள் திருமண மண்டபத்தில் அதிமுக மாவட்ட செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி கொறடா எஸ் பி வேலுமணி தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர் கப்பச்சி டி வினோத் முன்னிலையில் கூட்டம் துவங்கியது கூட்டத்தில் 2000க்கும் மேலான செயல்வீரர்கள் வீராங்கனைகளுக்கு நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்,.நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சிறப்புரையாற்றி வரும் சட்டமன்ற தேர்தலுக்கான ஆலோசனைகள் வழங்கினார், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கழக நிர்வாகிகள் முன்னாள் மாவட்ட செயலாளர் அர்ஜுனன், குன்னூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ. சாந்தி ராமு, உதகை நகர செயலாளர் கா. சண்முகம், முன்னாள் மாவட்ட செயலாளர் புத்திசந்திரன், 12 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஹக்கீம் பாபு, குன்னூர் நகர செயலாளர் சரவணன், குன்னூர் ஒன்றிய செயலாளர் பேரட் டி. ராஜு,உதகை ஒன்றிய செயலாளர் பெள்ளி, விவசாய சங்க தலைவர் ஜெயபால், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் கே கே மாதன், குந்தா ஒன்றிய செயலாளர் தப்ப கம்பை கிருஷ்ணன், கோத்தகிரி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்றிய செயலாளர், கேத்தி பேரூர் கழக செயலாளர் ஜெய் என்கின்ற ஜெயராஜ் சிவக்குமார், மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர், மற்றும் புதிதாக கழகத்தில் இணைந்துள்ள
3 ஆயிரத்துக்கு மேலான உறுப்பினர்கள் இவ்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அ இ திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்களுடன் இணைந்து விழா நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நீலகிரியில் அ.தி.மு.க செயல் வீரர்கள் வீராங்கனை ஆலோசனைக் கூட்டம்..!
