ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய கூலி திரைப்படம் சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
கடந்த 14ம் தேதி வெளியான இந்த படம் சுதந்திர தினம், சனி மற்றும் ஞாயிறு என தொடர் விடுமுறையால் 404 கோடி ரூபாய் வரை வசூலில் குவித்துள்ளது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கூலி படத்தின் இந்த வசூல் உலகம் முழுவதும் சேர்த்து ஆகும். இந்தியாவில் மட்டும் கூலி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை காணலாம். தொடர் விடுமுறை முடிந்து திங்கள் கிழமையான நேற்று வேலை நாள் என்பதால் பொதுவாக எந்த படமாக இருந்தாலும் ரசிகர்கள் கூட்டம் குறைவாக காணப்படும்.
கூலி படத்திற்கு ஓரளவு கூட்டம் நேற்று காணப்பட்டது. கூலி படம் முதல் நாள் 65 கோடியும், 2வது நாள் 54.75 கோடி ரூபாயும், 3வது நாள் 39.50 கோடி ரூபாயும், 4வது நாள் ரூ.35 கோடியும் வசூல் செய்த நிலையில், திங்கள்கிழமையான நேற்று ரூபாய் 12 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை ரூபாய் 206.50 கோடி ரூபாய் வசூலை கூலி படம் குவித்துள்ளது.
தமிழில் மட்டும் முதல் நாள் ரூ.44.5 கோடியும், 2வது நாள் 34.5 கோடி ரூபாயும், 3வது நாள் ரூபாய் 25.75 கோடியும், 4வது நாள் ரூ. 23.3 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. திங்கள்கிழமை தமிழில் மட்டும் எந்தளவு வசூல் என்ற விவரம் வெளியாகவில்லை. தமிழுக்கு அடுத்தபடியாக தெலுங்கில் நல்ல வசூலை கூலி படம் குவித்துள்ளது. அதற்கு நாகர்ஜுனா முக்கிய காரணமாக உள்ளார்.
5வது நாளான நேற்று காலை காட்சிக்கு 23.58 சதவீதமும், மதிய காட்சிக்கு 29.31 சதவீதமும், மாலை காட்சிக்கு 38 சதவீதமும், இரவுக்காட்சிக்கு 37 சதவீதமும் இருக்கைகள் நிரம்பியிருந்தது. தமிழ்நாட்டில் நேற்று சென்னையில் கூலி படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது. சென்னையில் 50 சதவீதமும் அரங்குகள் நிறைந்த காட்சியாகவே கூலி திரையிடப்பட்டது.
திருச்சியில் 49.50 சதவீதமும், திண்டுக்கல்லில் 47.25 சதவீதமும், கோவையில் 39.75 சதவீதமும், மதுரையில் 26.50 சதவீதமும், சேலத்தில் 31.75 சதவீதமும், வேலூரில் 28 சதவீதமும் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக கூலி ஓடியது. இந்தியிலும் கூலி படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.
திங்கள்கிழமையான நேற்று கூலி படம் ஹைதரபாத்தில் இந்தியில் 41 சதவீதம் அரங்குகள் நிறைந்த காட்சியாக ஓடியது. பெங்களூரிலும் இந்தியில் 30.25 சதவீதம் நிறைந்த காட்சியாக ஓடியது. சென்னையிலே இந்தியில் வெளியான கூலி படத்தை 29 சதவீதம் ரசிகர்கள் பார்த்தனர்.
ரஜினிகாந்திற்கு இந்தியா மட்டுமின்றி ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என வெளிநாட்டிலும் ரசிகர்கள் உள்ளனர். வெளிநாடு வாழ் தமிழர்கள் இதுபோன்று பெரிய நடிகர்களின் திரைப்படங்களை ஆர்வத்துடன் சென்று பார்ப்பது வழக்கம் ஆகும். ரஜினி படம் என்றால் மிகுந்த ஆர்வத்துடன் சென்று பார்ப்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் கூலி படத்தையும் ரசிகர்கள் வெளிநாட்டில் ஆர்வமுடன் சென்று பார்த்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.