தேர்தல் பாதுகாப்பு குறித்து கூடுதல் டிஜிபி ஆலோசனை!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள் நேற்று மாலை கோவை வந்தார். இன்று காலையில் ரேஸ் கோர்சில் உள்ள மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு ஐ.ஜி. சரவண சுந்தர் மற்றும் டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். மதியம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் போலீஸ் கமிஷனர் கண்ணன், துணை கமிஷனர்கள் உதவி கமிஷனர்களுடன் தேர்தல் பாதுகாப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்..