தர்மபுரியில் இருந்து சேலம் செல்லக்கூடிய தொப்பூர் வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே 4 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தர்மபுரி to சேலம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில், சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி ஒன்று, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற அருணகிரி, அவரது அக்கா கலையரசி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி, முன் சென்ற கண்டெய்னர் மீதும் மோதியதில், அந்த வாகனம் எதிர்ப்புற சாலையில் சென்று, ஆம்னி வாகனம் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் மற்றும் ஆம்னி வாகனத்தில் வந்த ஒருவர் மேற்கண்ட விபத்தை ஏற்படுத்திய டாரஸ் வாகனத்தில் சென்றவர்கள், தர்மபுரி அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது வரை 4 நபர்கள் இறந்துள்ளனர். 04 நபர்கள் காயமடைந்துள்ளனர். இதில்ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் கவலைக்கிடமாக உள்ளார் .
தற்போது இந்த விபத்தை அறிந்த தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி காவல்துறையினர் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் இந்த விபத்துகளை தடுக்கும் பொருட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.








