மாசம் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி… ரவி மோகன் பதில் என்ன..?

பிரபல நடிகரான ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்ததோடு விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த நிலையில், மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தியின் மனுவுக்கு நடிகர் ரவி மோகன் பதிலளிக்க சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை எனவும், ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து அளிக்க வேண்டும், சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆர்த்தியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என ரவி மோகன் திட்டவட்டமாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகர் ரவி மோகன், ஆர்த்தி என்பவரை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றம், சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது.

அதன்படி நடிகர் ரவி, ஆர்த்தி ஆகியோர் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நடிகர் ரவி மோகன் விவாகரத்து கோரி வழக்கு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது, ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து அளிக்க வேண்டும், சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆர்த்தியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என நடிகர் ரவி மோகன் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஆர்த்தி தரப்பில், மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சமாக நடிகர் ரவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுக்களுக்கு நடிகர் ரவி மோகன், ஆர்த்தி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 12 ம் தேதிக்கு தள்ளி வைத்தார். கோர்ட்டுக்கு வந்த ரவி மோகன், தனியாக வந்த நிலையில், பின்னர் தனது வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதேபோல ஆர்த்தி உயர் நீதிமன்றத்துக்கு தனியாகவே வந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஆர்த்தி ரவி மோகன் பிரிவுக்கு கெனிஷா தான் காரணம் என கூறப்பட்ட நிலையில் இரு தரப்புமே அதற்கு விளக்கம் அளிக்காமல் இருந்தது. இந்த நிலையில் கெனிஷா தனது வாழ்வின் ஒளி என ரவி மோகன் அறிக்கை வெளியிட, தங்கள் பிரிவுக்கு காரணமே அவர்தான் என ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது, கடந்த சில தினங்களாகவே ரவி மோகன் கெனிஷா, ஆர்த்தி, ஆர்த்தியின் தாயார் என அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்டு மோதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுதான் தற்போது திரைத்துறையினர் இடையே பேசு பொருளாக இருக்கிறது.