கோவை மே 27 கோவை ஆர்.எஸ். புரத்தில் வெளிநாடுகளுக்கு படிக்க அனுப்பி வைக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் வெளிநாடுகளில் வேலை வாங்கி கொடுத்து வருகிறது. அந்த நிறுவனத்தின் பெண் இயக்குனருக்கு குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான நபர் ஒருவர் அறிமுகமானார். அவர் தானும் வெளிநாட்டில் பலருக்கு வேலை வாங்கி கொடுத்து வருவதாக கூறினார். இதையடுத்து குஜராத்தை சேர்ந்த அந்த வாலிபருடன் தனியார் நிறுவன பெண் இயக்குனர் ஒப்பந்தம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து பலருக்கு உக்ரைன் போலந்து, சோபியா உட்பட பல நாடுகளுக்கு வேலை வாங்கி தருவதாக கூறினார். அத்துடன் பலருக்கு டாக்டர் படிக்க வைக்க சீட்டு வாங்கி தருவதாகவும் கூறி பாஸ்போர்ட்டுகளை பெற்றார். அத்துடன் விரைவில் விசா கிடைத்துவிடும் என்று கூறிய அந்த நபர் பணி நியமன ஆணைகளையும் அவர் அந்தப் பெண் இயக்குனருக்கு அனுப்பி வைத்தார். அதற்காக பல்வேறு தவணைகள் மூலம் ரூ.64 லட்சம் பெற்றுக் கொண்டார் .பணி நியமன் ஆணைகளை வாங்கி அந்த நிறுவன பெண் இயக்குனர் அது தொடர்பாக விசாரணை செய்தபோது அது போலியான பணி நியமன என்பது தெரியவந்தது .உடனே அவர் குஜராத் மாநில வாலிபரை தொடர்பு கொண்ட போது அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அப்போதுதான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டதை தெரிய வந்தது. இதை குறித்து அந்த பெண் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தினார்.அதில் அவர் குஜராத் மாநிலம் கம்பத் அருகே உள்ள அலையா படோ பகுதியைச் சேர்ந்த முகமது இர்பான் ஷேக் ( வயது 25) என்பது தெரியவந்தது .இதை யடுத்து போலீசார் முகமது இர்பான் ஷேக்கை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவர் வேறு யாரிடமாவது இதுபோன்று மோசடி செய்து உள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 64 லட்சம் மோசடி. வட மாநில வாலிபர் கைது .
