கஞ்சா – வீச்சு அரிவாளுடன் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த வாலிபர் கைது..!

கோவை சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ,சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு ஆகியோ நேற்று மாலையில் நீலி கோணாம்பாளையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர் . அவரிடம் 1,100 கிராம் கஞ்சா, நீளமான வீச்சு அரிவாள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் . விசாரணையில் அவர் சலீவன் வீதியை சேர்ந்த சரவணன் (வயது 27) என்பது தெரிய வந்தது. அவருடன் சேர்ந்த அபி விஷ்ணு என்பவர் தப்பி ஓடி விட்டார். அவரை தேடி வருகிறார்கள்.