விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் மாசிலாமணி ( வயது 28 )இவர் சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தில் தங்கி இருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று அவர் வேலை முடிந்து வாகராயம்பாளையம் – தென்னம்பாளையம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு நாய் ரோட்டின் குறுக்கே பாய்ந்தது. இதனால் மாசிலாமணி நிலை தடுமாறி கீழே விழுந்தார்..இதனால் தலையில் பலத்த காயமடைந்த அவர் அதே இடத்தில் பலியானார் .இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாய் குறுக்கே பாய்ந்ததால் பைக்கில் சென்ற வாலிபர் பரிதாப பலி..
