கோவை அருகே உள்ள மருதமலை வனபகுதியில் காட்டுயானைகள்,புள்ளி மான்கள் காட்டு பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளன. இதில் காட்டுயானைகள் அவ்வப்போது உணவு தேடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காட்டு யானை ஒன்று மருதமலை வனப்பகுதியில் இருந்து மயில் மண்டப வழியாக மலைப்பாதை படிக்கட்டு பகுதிக்கு வந்தது. அங்கு இரும்பு கதவு பூட்டி வைக்கப்பட்டிருந்தது. அதை காட்டு யானை இடித்து தள்ளியது .இதில் அந்த இரும்பு கதவு சேதமடைந்தது. இதையடுத்து அந்த யானை மலைப்பதில் உள்ள கடைகளை நோக்கிச் சென்றது. அப்போது யானை சத்தம் கேட்டு வியாபாரிகள் வன துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத் துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து காட்டு யானையை காட்டுக்குள் துரத்தி அடித்தனர் . அதிகாலை நேரம் என்பதால் பக்தர்கள் யாரும் அங்கு இல்லை. இதனால் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை..
மருதமலையில் மலைப்பாதை கோவில் கதவை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை.!!
