பாய்ந்து தாக்கிய காட்டெருமை! நூலிழையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்! மிரளவைக்கும் அதிர்ச்சி வீடியோ!

வால்பாறையில் பாய்ந்து தாக்கிய காட்டெருமை! நூலிழையில் தப்பிய சுற்றுலா பயணிகள்! மிரளவைக்கும் அதிர்ச்சி வீடியோ வைரல்!

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சாலையோரங்களில் அவ்வப்போது காட்டெருமைகள் கூட்டாகவும் தனித்தனியாகவும் நடமாடி வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி அதன் அருகே சென்று ஆர்வமுடன் பார்ப்பதும் புகைப்படம் எடுப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள சின்னக் கல்லார் பகுதியில் இரண்டு காட்டெருமைகள் சாலையோரத்தில் மேய்ச்சலில் இருந்தது.  அப்போது  சுற்றுலாப் பயணிகள் தங்களது இருசக்க வாகனத்தில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த காட்டெருமை ஒன்று திடீரென பாய்ந்து வந்து வாகனத்தை முட்டித் தள்ளியது . நிலைகுலைந்து கீழே விழுந்த இரு சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளனர் . இக்காட்சியை அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் . இக்காட்சி சுற்றுலாப் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் நிற்கவோ, அருகே சென்று புகைப்படம் எடுப்பதையோ சுற்றுலாப் பயணிகள் தவிர்த்து எச்சரிக்கையாக கடந்து செல்லவேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்🔴🔴🔴