கோவை ஜூன் 2 பிரபல யோகா குரு பாபா ராம் தேவ் நேற்று காலை மும்பையில் இருந்து கோவைக்கு தனி விமானத்தில் வந்தார் .பின்னர் அவர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில் மும்பை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். தொடர்ந்து தனி விமானத்தில் மும்பைக்கு புறப்பட்டார் .அந்த தனி விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானி அந்த விமானத்தை பத்திரமாக மீண்டும் கோவை விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதையடுத்து பாபா ராம்தேவ் அந்த விமானத்திலிருந்து இறங்கி மும்பை செல்லும் இண்டிகோ விமானத்தில் புறப்பட்டு சென்றார்..
யோகா குரு பாபா ராம்தேவ் வந்த தனி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு .
